Aug 8, 2024
BY: Anoj, Samayam Tamilகாலையில் செய்த இடியாப்பம் மீந்து விட்டால், மாலையில் முட்டை சேர்த்து அட்டகாசமான முட்டை இடியாப்பம் செய்து சாப்பிடலாம். அதனை எப்படி செய்வது என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: instagram-com/karthiknagappan
உதிர்த்த இடியாப்பம் - 2 கப்; முட்டை - 3; சின்ன வெங்காயம் - 5; தக்காளி - 3; பூண்டு - 6 பற்கள்; மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்; உப்பு - சுவைக்கேற்ப; எண்ணெய் - தேவையான அளவு
Image Source: instagram-com/itz-me-nura
முதலில் ஒரு பவுலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துவிட்டு, உப்பு சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்
Image Source: pexels-com
இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை கலவையை ஊற்றி நன்றாக கிளறிவிடவும். முட்டை வெந்ததும் தனி பவுலுக்கு மாற்றிகொள்ளவும்
Image Source: istock
மிக்ஸி ஜாரில் நறுக்கிய தக்காளி, நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நைஸாக அரைத்துகொள்ளவும்
Image Source: istock
அதே கடாயில் மீண்டும் எண்ணெய் ஊற்றி அரைத்த மசாலாவை சேர்த்து வதக்க வேண்டும்.
Image Source: istock
பிறகு, நன்கு உதிர்ந்த மீந்துபோன இடியாப்பத்தை கலவையில் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்
Image Source: istock
அடுத்து, வேகவைத்த முட்டையை போட்டு நன்றாக கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும்
Image Source: istock
அவ்வளவுதான், சுவையான முட்டை இடியாப்பம் ரெடி. இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
Image Source: instagram-com/happietrio
Thanks For Reading!