[ad_1] முட்டை உட்கொள்ளும் முன் இந்த உண்மைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்!

Jul 18, 2024

முட்டை உட்கொள்ளும் முன் இந்த உண்மைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்!

mukesh M

ஆரோக்கியம் தரும் முட்டை!

புரத சத்தின் சிறந்த ஆதாரமாக இருக்கும் முட்டைகள் தொடர்பான மக்கள் மத்தியில் பரவும் கட்டுகதைகள் குறித்தும் - இது தொடர்பான உண்மைகள் குறித்தும் இங்கு நாம் காணலாம்!

Image Source: pexels-com

தினமும் முட்டை சாப்பிடுவது ஆபத்து?

தினமும் முட்டை சாப்பிடுவது கொலஸ்ட்ரால் தேக்கத்திற்கு வழிவகுத்து, இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் என பலரும் நம்பும் நிலையில்; புரதத்தோடு எண்ணற்ற வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த முட்டைகளை தினமும் அளவோடு சாப்பிடுவதில் ஆபத்து ஏதும் இல்லை என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்!

Image Source: istock

மஞ்சள் கருவை உட்கொள்ள கூடாது?

மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் உள்ளடக்கம் காரணமாக இதை தவிர்ப்பது நல்லது என பலரும் நம்புகின்றனர். தகவல்கள் படி ஒரு முட்டையில் 211 மிகி கொலஸ்ட்ரால் மட்டுமே உள்ளது - இது நம் தினசரி கொலஸ்ட்ரால் தேவையில் 70% மட்டுமே ஆகும் - எனவே, ஒரு முட்டையில் எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை!

Image Source: istock

தவறுதலாக முட்டை ஓட்டை விழுங்கிவிட்டால்?

முட்டை உட்கொள்ளும் போது ஒரு சிலர் தவறுதலாக சிறு துண்டு அளவு முட்டை ஓட்டை விழுங்கிவிடுவது உண்டு. குறித்த இந்த விபத்து பெரிய ஆபத்துக்களை உண்டாக்குவது இல்லை - கிருமி தொற்றுக்கான வாய்ப்பு இருப்பினும், அத்தனை பெரிய ஆபத்துக்களை உண்டாக்குவது இல்லை!

Image Source: istock

வெள்ளை கரு vs மஞ்சள் கரு!

முட்டையின் மஞ்சள் கருவை காட்டிலும் வெள்ளை கரு ஊட்டச்சத்து அதிகம் நிறைந்தது என பலரும் நம்பும் நிலையில், இரண்டும் தனித்துவமான குணாதிசயங்கள், நன்மை - தீமைகளை கொண்டிருப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்!

Image Source: istock

உடல் எடையை கூட்டும் மஞ்சள் கரு?

முட்டையின் மஞ்சள் கருவை உட்கொள்வது கொலஸ்ட்ராலை அதிகரித்து, உடல் பருமனுக்கு வழிவகுக்கும் என பலரும் நம்பும் நிலையில்; இந்த கூற்று முழுவதுமாக உண்மை இல்லை எனவும், மஞ்சள் கருவில் உள்ள வைட்டமின் டி, கால்சியம் உறிஞ்சுதலை மேம்படுத்தி, எலும்புகளை வலுப்படுத்தும் எனவும் கூறப்படுகிறது!

Image Source: istock

பச்சை முட்டையில் அதிக சத்து?

முட்டைகளை சமைத்த நிலையில் உட்கொள்வதை காட்டிலும், பச்சையாக உட்கொள்வதில் அதிக ஊட்டங்களை பெறலாம் என பலரும் நம்புகின்றனர். நிபுணர்கள் கூற்றுப்படி இது சமைத்த முட்டையில் கிடைக்கும் ஊட்டங்களின் அளவு 91% எனில், பச்சை முட்டையில் கிடைப்பது 50% மட்டுமே!

Image Source: istock

கர்ப்பிணிகளுக்கு முட்டை?

கர்ப்பிணிகள் முட்டை உட்கொள்வது கருவில் வளரும் குழந்தையை பாதிக்கும் என பலரும் நம்பும் நிலையில்; இது தொடர்பான அறிவியல் நிரூபணம் ஏதும் இல்லை என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். எனினும், முட்டை உட்கொள்ளும் முன் உங்கள் மருத்துவர் பரிந்துரை பெறுவது நல்லது!

Image Source: istock

வயது முதிர்ந்தவர்கள் உட்கொள்ள கூடாது!

முட்டையின் மஞ்சள் கருவில் காணப்படும் கொலஸ்ட்ரால் காரணமாக இதனை வயது முதிர்ந்தவர்கள் உட்கொள்ள கூடாது என மக்கள் பலரும் நம்பும் நிலையில்; 13 அத்தியாவசிய வைட்டமின் - மினர்களை கொண்டிருக்கும் முட்டைகள் அனைத்து வயதினருக்கும் ஏற்றது என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

Image Source: istock

Thanks For Reading!

Next: உணவுக்கு பிறகு கொஞ்சம் 'சோம்பு' சாப்பிடுவதன் நன்மைகள் தெரியுமா?

[ad_2]