[ad_1] முட்டை, முந்திரி பயன்படுத்தி ஒரு அல்வா - செய்வோமா!

Jun 6, 2024

முட்டை, முந்திரி பயன்படுத்தி ஒரு அல்வா - செய்வோமா!

mukesh M

முட்டை - முந்திரி அல்வா!

முட்டை, முந்திரியுடன் மேலும் சில பொருட்கள் சேர்த்து சுவையான அல்வா ஒன்றினை தயார் செய்வது எப்படி என இங்கு நாம் காணலாம்!

Image Source: istock

தேவையான பொருட்கள்!

முட்டை - 4 | மைதா - 1 கப் | சர்க்கரை - 1 கப் | நெய் - 2 ஸ்பூன் | முந்திரி பருப்பு - 1 கப் | பால் - 1/2 கப் | தேன் - 1 கப்

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் எடுத்துக்கொண்ட முட்டையை உரைத்து ஒரு கோப்பையில் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும்.

Image Source: istock

செய்முறை படி - 2

தொடர்ந்து அகன்ற கோப்பை ஒன்றை எடுத்து அதில் சர்க்கரையுடன் மைதா மாவு சேர்த்து நன்கு ஒரு முறை கலந்துவிடவும்.

Image Source: istock

செய்முறை படி - 3

தற்போது இதனுடன் அடித்து வைத்த முட்டையை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு ஒரு முறை கரைத்து தனியே தயாராக எடுத்து வைக்கவும்.

Image Source: pexels-com

செய்முறை படி - 4

தற்போது கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்த்து சூடேற்றவும். நெய் நன்கு உருகியதும் இதில் முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

Image Source: istock

செய்முறை படி - 5

பின் இதே நெய்யில் கரைத்து வைத்த முட்டை, மைதா, சர்க்கரை சேர்மத்தை சேர்த்து அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

Image Source: istock

முட்டை - முந்திரி அல்வா ரெடி!

பின் இதனுடன் வறுத்த முந்திரி சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான முட்டை - முந்திரி அல்வா ரெடி!

Image Source: istock

எப்படி பரிமாறுவது?

தயாராக உள்ள இந்த முட்டை - முந்திரி அல்வாவினை ஒரு கோப்பையில் வைத்து அதன் மீது தேன் சேர்த்து கண்களுக்கு கவர்ச்சியாக பரிமாறவும்!

Image Source: istock

Thanks For Reading!

Next: செட்டிநாடு ஸ்டைலில் 'காலிஃபிளவர் மிளகு வறுவல்' செய்வது எப்படி?

[ad_2]