[ad_1] முதல் பணியிலே அதிக சம்பளம் கிடைக்க வழிவகை செய்யும் பட்டப்படிப்புகள்

May 28, 2024

முதல் பணியிலே அதிக சம்பளம் கிடைக்க வழிவகை செய்யும் பட்டப்படிப்புகள்

Anoj

உயர்ந்த சம்பளம் பட்டப்படிப்புகள்

உயர்கல்விக்கான பட்டப்படிப்பு தொடர்பான பல்வேறு கேள்விகள் மாணவர்களிடையே இருந்தாலும் அது மிக முக்கியமான ஒன்று படித்தால் வேலை கிடைக்குமா என்பது தான். அப்படியே கிடைத்தாலும் எதிர்பார்த்த சம்பளம் கிடைக்குமா என்பது தான். ஆரம்பத்திலே அதிக சம்பளம் கிடைக்கப்பெறும் பட்டப்படிப்புகள் பற்றி காணலாம்.

Image Source: istock

கணினி அறிவியல்

கம்பியூட்டர் சயின்ஸ் என்றழைக்கப்படும் கணினி அறிவியல் பட்டப்படிப்பு அதிக தொடக்க சம்பளம் கொண்ட தொழில்களுக்கு முன்னோடியாகும். தரவு பகுப்பாய்வு, இணைய பாதுகாப்பு, மென்பொருள் மேம்பாடு போன்ற தொழில்நுட்ப ரீதியான விஷயங்கள் தெரிந்தால் அதிக சம்பளம் பெறலாம்.

Image Source: istock

பொறியியல்

பல்வேறு விதமான பொறியியல் படிப்புகள் இருந்தாலும் எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கெமிக்கல், சாஃப்ட்வேர் போன்ற துறைகளும் இன்றும் மிகப்பெரிய அளவில் மவுசு உள்ளது. தேவைகள் காரணமாக அதிக சம்பளம் தர நிறுவனங்களும் தயாராகவே உள்ளது.

Image Source: istock

நிதி சார்ந்த படிப்புகள்

வங்கி, முதலீட்டு நிறுவனங்கள், பங்குச்சந்தை போன்ற நிதி தொடர்பான நிறுவனங்களில் நல்ல சம்பளம் பெற நிதி சார்ந்த படிப்புகள் அவசியமாகிறது. நிதி ஆலோசகர்களாக இருக்க விரும்புபவர்கள் இந்த படிப்பை முடிக்கலாம்.

Image Source: istock

நர்சிங் படிப்புகள்

மருத்துவத்துறையில் சுகாதாரப் பணியாளர்கள் தேவை நாளுக்கு நாள் தேவைப்படுவதால் நர்சிங் படிப்புகளுக்கான வாய்ப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சேவை மற்றும் அனுபவம் உயர்வான சம்பளத்துக்கு வழிவகுக்கும். வெளிநாடுகளில் நர்சிங் படிப்புக்கு அதிக தேவை உள்ளது

Image Source: istock

தகவல் தொழில்நுட்பம்

கணினி அமைப்புகள், மென்பொருள், நிரலாக்க மொழிகள் மற்றும் தரவு போன்ற படிப்புகளை உள்ளடக்கிய தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் அனைத்து துறைகளிலும் மிக முக்கியமான தேவையாக உள்ளது.

Image Source: pexels-com

பெட்ரோலியம் பொறியியல்

ஹைட்ரோகார்பன்களின் உற்பத்தி தொடர்பான செயல்பாடுகளுடன் தொடர்புடைய பட்டப்படிப்பு பெட்ரோலியம் பொறியியலாகும். எண்ணெய் துறையில் பெட்ரோலிய வளங்களை பிரித்தெடுத்து, செயல்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அதிக ஊதியம் கொடுக்கப்படுகிறது.

Image Source: istock

மருந்தாளுநர்கள்

மருந்துகளை சேமித்தல், கையாளுதல் மற்றும் வழங்குதல் போன்ற பணிகளை செய்ய மருந்தாளுநர் பட்டப்படிப்பு அவசியமாகிறது. மெடிக்கல் போன்ற சுய தொழிலையும் நம்மால் தொடங்கி அதிகம் சம்பாதிக்க முடியும்.

Image Source: istock

மற்ற படிப்புகள்

எல்லா பட்டப்படிப்புகளிலும் வேலை வாய்ப்புகளும், அதிக சம்பளத்துடன் கூடிய பணிகளும் நிறைந்துள்ளது. நாம் பாடப்புத்தகங்களை மட்டும் பின்பற்றாமல் அந்த பட்டப்படிப்பு சார்ந்த திறன்களை வளர்த்து கொள்வது நல்ல சம்பளத்துடன் வேலை கிடைப்பதை உறுதி செய்கிறது

Image Source: istock

Thanks For Reading!

Next: தோல்விகளை வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றுவது எப்படி?

[ad_2]