Jul 1, 2024
நமது வீட்டில் உள்ள முதியோர்கள் சரியாக சாப்பிட மாட்டார்கள். இதற்கு மேல் சத்தான உணவை சாப்பிட்டு என்ன செய்ய போகிறோம் என்று சொல்லி நாம் அனைவருமே கேட்டிருப்போம். ஆனால் உண்மையில் இவர்கள் தான் நல்ல சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.
Image Source: pixabay
வயது முதிர்ந்த பலருக்கு இருக்கும் பெரும் பிரச்சனைகளுள் ஒன்று மலச்சிக்கல். இவர்களது தவறான உணவு வழக்கத்தால் தான் இவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
Image Source: istock
வயது முதுமையடைந்தாலே இயற்கையாகவே குடல் சுருக்கம் உண்டாகி அதன் தன்மை மாறிவிடுகிறது. மேலும் குடலில் வறட்சியும் அதிகரிக்கிறது. இதுவும் இவர்களது மலச்சிக்கலுக்கு ஓர் மிகப்பெரிய காரணமாகும்.
Image Source: istock
உடலில் இயல்பாகவே 50% தண்ணீர் சத்து இருக்க வேண்டியது அவசியம். அதனால் அடிக்கடி நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது
Image Source: pexels
செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க நார்சத்து அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வையுங்கள். இதுவும் தீர்வளிக்கக்கூடும்.
Image Source: istock
மலச்சிக்கல் பிரச்சனை இருந்தாலே வாயு தொல்லை ஏற்படும். வாயு காரணமாக முதுகு வலி போன்ற தொந்தரவுகள் உண்டாகிறது. இது போன்ற பிரச்சனைகள் 10 நாட்களுக்கு மேல் வயதானவர்களுக்கு இருந்தால் திரிபலா போன்ற ஆயுர்வேத மருந்துகளை கொடுக்கலாம்.
Image Source: pixabay
சீசனுக்கு தகுந்தாற்போல் உணவு முறைகள் மாறும். அப்போது மலச்சிக்கல் பிரச்சனையும் குணமாகிவிடும். ஆனால் முதியோர்களுக்கு இந்த பிரச்சனை அவ்வளவு சீக்கிரம் குணமாகாது என்றே கூறப்படுகிறது.
Image Source: pixabay
மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து தீர்வு பெற ஆயுர்வேதத்தில் பல்வேறு மருத்துவங்கள் உள்ளது. எனினும், சரியான உணவு முறைகள் மற்றும் நேரத்திற்கு சாப்பிடுவது இந்த தொந்தரவுகளை தீர்க்க மிகவும் உதவும் என்பதால் இதில் கவனம் செலுத்துங்கள்.
Image Source: pixabay
வயிறு வலி, தசைப்பிடிப்பு, வயிறு வீக்கம், கெட்டியாக மலம் கழிதல், பசியின்மை, குமட்டல் போன்றவைகள் இதன் அறிகுறிகள். 10 நாட்களுக்கு மேலாக இந்த அறிகுறிகள் இருந்தால் அதிக கவனம் தேவை, மருத்துவர்களை அணுகுவது சிறந்தது.
Image Source: pixabay
Thanks For Reading!