Aug 3, 2024
முதுகில் கூன் ஏற்பட பல காரணங்கள் இருக்கிறது. ஆனால் அதில் முக்கியமான ஒன்று என்றால் அது கழுத்து எலும்பு தேய்மானம். தலையில் அதிக கனம் தூக்குவதாலோ, நீண்ட நேரம் குனிந்த நிலையில் வேலை பார்ப்பதாலோ இது போன்ற தேய்மானம் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
Image Source: pexels
உடலிலுள்ள வம்சி இடைத்தட்டானது அடிபடும் போதும் அல்லது வேறு பல காரணங்களால் அதன் வழக்கமான இடத்தில் இருந்து விலகிவிடுகிறது. இப்படி விலகுவதால் நாளடைவில் மேலும் கீழும் இருக்கும் 2 வம்சிகளும் நேரடியாக ஒன்றோடு ஒன்று உராய துவங்கி, எலும்புகளில் தேய்மானம் ஏற்பட்டு முதுகெலும்பின் அமைப்பு மாறி சற்று முன்னோக்கி சாய்ந்து கூன் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
Image Source: pixabay
உடலில் போதியளவு சுண்ணாம்பு சத்து இல்லையென்றாலும் எலும்புகள் பலவீனமாகுவதோடு, அதன் வளர்ச்சி குறையும் நிலையும் ஏற்படும். இதனால் சில வயது முதிர்ந்தோருக்கு கூன் விழுந்து உடல் சாய்ந்த நிலையில் இருக்கும். இடிப்பு எலும்பும் பின்னோக்கி வளைந்தவாறு காணப்படும்.
Image Source: pexels
நமக்கு பொருத்தமில்லாத நாற்காலியில் அதிக நேரம் உட்காருவது, புகை மற்றும் மது பழக்கம் அதிகமாக இருக்கும் நிலையில் மன உளைச்சலுக்கு ஆளாகி அதிக நேரம் வேலை பார்ப்பது, நீண்ட நேரம் அமர்ந்தபடி பயணம், அதிக கோபம், ஏதும் விபத்தால் முதுகு பகுதியில் அடி, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்டவை இதன் காரணமாக அமையக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Image Source: pixabay
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் நமது உடலுக்கும் எலும்புகளுக்கும் தேவையான சத்துக்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் நம் உணவில் போதியளவு சுண்ணாம்பு சத்து இல்லையெனில் நாம் சாப்பிட்ட உணவு செரிமானமாகாமல் மந்தமான நிலை ஏற்படும்.
Image Source: pixabay
ஒருவருக்கு முதுகில் கூன் பல காரணங்கள் இருக்கும் நிலையில், நம் எடுத்து கொள்ளும் உணவில் எலும்புகள் பலப்படும் சுண்ணாம்பு சத்து அதிகமுள்ள அகத்தி கீரையை அடிக்கடி சேர்த்து சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
Image Source: istock
அகத்தி கீரையில் அதிகளவு சுண்ணாம்பு சத்து மற்றும் வைட்டமின் உயிர் சத்தும் இருக்கிறது. இவை இரண்டும் நம் உடலில் எலும்புகளுக்கு தேவையான சத்துக்களை தரக்கூடியது. எனவே உடலும், எலும்பும் பலம் பெற குழந்தைகள் முதல் பெரியோர் வரை வாரம் ஒருமுறையாவது இந்த அகத்தி கீரையை சாப்பிடுவது நல்லது.
Image Source: istock
சத்துக்கள் அதிகம் என்றாலும் அகத்தி கீரையை சாப்பிடுவதால் பலருக்கு வாயு பிரச்சனை ஏற்படலாம். அதனை தவிர்க்க கீரையில் பெருங்காயம் மற்றும் வெள்ளை பூண்டை சேர்த்து சமைத்து சாப்பிடவும். இவை வாயு பிரச்சனையை நீக்கி விடும்.
Image Source: istock
கழுத்து வலி மற்றும் அதன் தேய்மானம் சரி செய்ய சில எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்ய முடியாத பட்சத்தில் தினமும் 5ல் இருந்து 10 வினாடிகள் புல் அப்ஸ் பயிற்சிகளை செய்யலாம். எனினும் இவைகளை செய்ய துவங்குவதற்கு முன்னர் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று கொள்வது சிறந்தது.
Image Source: pexels
Thanks For Reading!