Jul 17, 2024
முதுகெலும்பு இல்லா உயிரினங்கள் இன்வேர்டிப்ரேட்ஸ் (Invertebrates) என்று அழைக்கப்படுகின்றன. பல்வேறு வாழ்விடங்களைச் சார்ந்த இவற்றில் பிரபலமான சிலவற்றைக் காண்போம்.
Image Source: pexels-com
ஜெல்லி மீனின் உடல் 95% முதல் 98% வரை நீரால் ஆனது. மீன் என்று அழைக்கப்பட்டாலும், உண்மையில் மீன்களைப் போல் முதுகுத் தண்டு இதற்கு இல்லாததால் இவை இன்வேர்டிப்ரேட்ஸ் பிரிவைச் சேர்ந்தவை.
Image Source: pexels-com
எட்டுக் கால்களுடன் மென்மையான உடல் அமைப்பைக் கொண்ட இது அதன் அறிவுக் கூர்மை மற்றும் மறைந்து வாழும் திறனுக்குப் பெயர் பெற்றது, இதற்கும் முதுகெலும்பு கிடையாது.
Image Source: pexels-com
ஆக்டோபஸ்களை போலவே ஸ்க்விட்களும் எலும்புகள் இல்லாத தசை மற்றும் இணைப்பு திசுக்களால் ஆன மென்மையான உடல் அமைப்பைக் கொண்டுள்ளன.
Image Source: pexels-com
டெர்மிஸ் எனப்படும் கடினமான வெளிப்புற தோலையும் ‘ஆசிகல்ஸ்’ எனப்படும் கால்சியம் கார்பனேட்டால் ஆன உடலையும் கொண்ட இவையும் இன்வேர்டிப்ரேட்ஸ் பிரிவைச் சேர்ந்தவை.
Image Source: pexels-com
தனது உடலின் மேல் எண்டோஸ்கெலிடன் எனப்படும் ஷெல் போன்ற ஒன்றைக் கொண்டுள்ள நத்தையின் உடலில் எலும்புகள், மூட்டு இணைப்புகள் என எதுவும் கிடையாது.
Image Source: pexels-com
நண்டுகளுக்கு எலும்புகள் இல்லை, மாறாக அவை உடலின் வெளிப்புறம் ‘எக்ஸோஸ்கெலிட்டன்’ எனப்படும் கடினமான கூட்டை கொண்டுள்ளது. ஆகையால் இவையும் இன்வேர்டிப்ரேட்ஸ் வகையைச் சார்ந்தவை.
Image Source: pexels-com
மண்புழுக்கள், நாடாப்புழுக்கள் மற்றும் உருண்டை புழுக்கள் போன்ற பல்வேறு வகையான புழுக்கள் எலும்புகள் இல்லாத மென்மையான உடலையேக் கொண்டுள்ளன.
Image Source: unsplash-com
கடலுக்கு அடியில் காலனிகள் அமைத்து வாழும் பவளப்பூச்சிகளுக்கு எலும்புகள் கிடையாது, கால்சியம் கார்பனேட் எனப்படும் சுண்ணாம்புச் சத்து அடங்கிய ஓடுகளை இவை கொண்டுள்ளன.
Image Source: pexels-com
Thanks For Reading!