[ad_1] முருங்கை பிசின் கொடுக்கும் ஏராளமான நன்மைகள் தெரியுமா ?

Aug 13, 2024

முருங்கை பிசின் கொடுக்கும் ஏராளமான நன்மைகள் தெரியுமா ?

Nivetha

முருங்கை பிசின்

முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் இலைகள், பூக்கள், காய் என அனைத்துமே நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதே போல் முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் இன்னொரு பொருள் தான் முருங்கை பிசின். இதுவும் நமது உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்துக்களை அளிக்கக்கூடியது.

Image Source: pexels

கழிவா ?

இந்த முருங்கை பிசின் என்பது அந்த மரத்தில் இருந்து கிடைக்கும் கழிவு என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு, முருங்கை மரத்திலிருந்து கசியும் கெட்டியான ஒரு ஈரப்பதம் கொண்ட ஒரு பொருளை தான் பிசின் என்கிறார்கள். இது ஈரப்பசையோடு இருந்தாலும், சிறிது நேரத்திற்கு பிறகு கெட்டியாக மாறிவிடும்.

Image Source: pexels

நன்மைகள்

முருங்கை பிசினில் வைட்டமின் சி, ஏ, தாதுப்புக்கள், கால்சியம், பொட்டாசியம் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. சந்தையில் இந்த முருங்கை பிசின் அதிக விலையில் விற்கப்பட்டாலும். இதனை உட்கொள்வதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Image Source: pixabay

மூட்டு வலி

முருங்கை பிசினை நெய்யில் போட்டு நன்கு வறுத்து அதனை பொடி செய்து ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து கொள்ளுங்கள். பின்னர் இதில் 1 டீஸ்பூன் எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் முட்டி வலி நீங்கும். அதே போல் இதில் வைட்டமின் சி அதிகமிருப்பதால் ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும், ஹீமோகுளோபின் அளவு குறைதல் மற்றும் ரத்த சோகை பிரச்சனைக்கும் இது தீர்வளிக்கும்.

Image Source: istock

உடல் வலுப்பெற

பாதாம் பிசினை ஊறவைப்பது போல் முருங்கை பிசினையும் முந்தைய இரவு தண்ணீரில் ஊற வைத்து கொள்ளுங்கள். மறுநாள் காலை பசும்பாலில் நாட்டு சர்க்கரை போட்டு நன்கு காய்ச்சி எடுத்து அதில் இந்த ஊறவைத்த முருங்கை பிசினை போட்டு குடித்து வந்தால் உடல் வலுப்பெறும்.

Image Source: pixabay

இளநரை

முருங்கை பிசினில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் இளநரை பிரச்சனையை தீர்க்க பயன்படுவதோடு, இதிலிருக்கும் அதிகளவு இரும்புச்சத்து முடி உதிரும் பிரச்சனைக்கும் தீர்வினை அளிக்கும் என்று கூறப்படுகிறது.

Image Source: istock

தலைவலி

சிலருக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் முருங்கை பிசினை வாங்கி வறுத்து அதனை பொடி செய்து கொள்ளுங்கள். தலைவலி ஏற்படும் நேரத்தில் இந்த பொடியை நீரில் குழைத்து தலையில் பற்று போடுங்கள், வலி பறந்து விடும்.

Image Source: pexels

கெட்ட கொழுப்புகள்

முருங்கை பிசினை உட்கொள்வதன் மூலம் நமது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் வெளியேற்றப்படும். அதே சமயம் உடல் எடையை குறைக்க முயற்சி செய்வோர் அன்றாடம் செய்யும் உடற்பயிற்சியோடு, முதல்நாள் ஊறவைத்த பிசினை மறுநாள் காலை சாப்பிட்டால் உடல் எடையை குறைக்க உதவும்.

Image Source: istock

எங்கு கிடைக்கும்?

பலருக்கும் இந்த பிசின் எங்கு கிடைக்கும்? என்ற கேள்வி எழும். இந்த பிசின் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது, வாங்கி பயன்படுத்தி பாருங்கள். நிச்சயம் அனைத்து பிரச்சனைகளுக்கும் பக்க விளைவுகள் ஏதுமின்றி தீர்வு கிட்டும்.

Image Source: istock

Thanks For Reading!

Next: சரும ஆரோக்கியம் மற்றும் ஜீரண மண்டலம் உள்ளிட்ட இரண்டையும் பாதுகாக்கும் பானங்கள்

[ad_2]