Jun 16, 2024
முருங்கை செடி முழுவதுமே பல்வேறு மருத்துவ பயன்களை அளிக்கக்கூடியது. இதன் பூவிலும் பல்வேறு மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது.
Image Source: istock
முருங்கை பூ பால் தினமும் குடித்து வந்தால் கண்களுக்கு குளிர்ச்சி அளிப்பதோடு, கபம், வாதம் உள்ளிட்டவைகளை சீராக வைத்திருக்கும்.
Image Source: pexel
காய்ச்சிய பால், பனங்கற்கண்டு மற்றும் முருங்கை பூ கொண்டு இந்த ரெசிபியினை எளிதாக செய்து விடலாம்.
Image Source: pexel
அடுப்பில் ஓர் பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். அதன் பின்னர் அதில் கழுவி எடுத்து வைத்துள்ள முருங்கை பூக்களை போட்டு நிறம் மாறும் வரை நன்கு கொதிக்க விடவும்.
Image Source: pexel
நீரின் நிறம் மாறிய பின்னர் காய்ச்சிய பாலினை அதில் ஊற்றவும். மீண்டும் பால் நன்கு கொதித்து பொங்கி வரும் பொழுது தீயினை குறைத்து நன்கு சுண்ட விட வேண்டும்
Image Source: pexel
பின்னர் அடுப்பினை அணைத்து 5 நிமிடங்கள் பாலை மூடி போட்டு மூடி வைக்கவும். ஒரு டம்ளரில் தேவையான அளவு பனங்கற்கண்டு போட்டு அதில் இந்த பாலினை வடிகட்டி ஊற்றி நன்கு கலக்கவும்.
Image Source: pexel
இந்த பாலை தொடர்ந்து குடித்து வந்தால் நினைவாற்றல் படிப்படியாக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
Image Source: pexel
இந்த பாலை குடிப்பதன் மூலம் தொண்டை, நெஞ்சு மற்றும் தோல் போன்ற பகுதிகளில் ஏற்படும் தொற்றுகளில் இருந்தும் தீர்வு பெறலாம்.
Image Source: pexel
இந்த பாலில் அதிகளவு புரத சத்து நிரம்பியுள்ளது. எனவே இதனை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
Image Source: Samayam Tamil
Thanks For Reading!