Jul 8, 2024
ஆக்ரோஷமும், உத்வேகமும் நிறைந்த சவுரங் கங்குலி, ஒரு காலத்தில் இந்திய அணியை உலக கிரிக்கெட் அரங்கில் வழிநடத்தியவர். அவரை ரசிகர்கள் செல்லமாக 'தாதா' என அழைப்பார்கள். அவரது முறியடிக்க முடியாத சாதனைகளின் பட்டியலை இங்கு பார்க்கலாம்
Image Source: instagram-com
1999ல் டவுண்டனில் நடந்த உலக கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் சவுரவ் கங்குலி 183 ரன்கள் எடுத்தார். ஒருநாள் உலக கோப்பை வரலாற்றில் இந்தியரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் இதுவாகும்.
Image Source: instagram-com
1997ல் டொராண்டோவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில், தொடர்ச்சியாக 4 முறை ஆட்டநாயகன் விருதை சவுரவ் கங்குலி வென்று எடுத்தார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை யாரும் முறியடித்திடவில்லை
Image Source: instagram-com
2000 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பைனலில் நியூசிலாந்திற்கு எதிராக 117 ரன்கள் சவுரவ் கங்குலி குவித்தார். அந்த டிராபியின் இறுதிப்போட்டிகளில் இதுவரை யாரும் கங்குலியின் தனிநபர் ஸ்கோரை முறியடிக்கவில்லை
Image Source: x-com
1999 உலக கோப்பையில் ராகுல் டிராவிட் - சவுரவ் கங்குலி ஜோடி இணைந்து 318 ரன்கள் குவித்தனர். இது ஒருநாள் உலக கோப்பை வரலாற்றில் இந்திய ஜோடியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும். அதேநேரம், உலகளவில் 2வது அதிக பார்ட்னர்ஷிப் ஸ்கோர் ஆகும்
Image Source: x-com
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் சவுரவ் கங்குலி 3 சதங்கள் அடித்துள்ளார். அந்த எண்ணிக்கை தாண்டி இதுவரை சாம்பியன் டிராபி வரலாற்றில் யாரும் சதம் அடித்தது கிடையாது. கிப்ஸ், ஷிகர் தவான் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோரும் 3 சதங்கள் மட்டுமே அடித்துள்ளனர்.
Image Source: instagram-com/souravganguly
2007ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 239 ரன்கள் சவுரவ் கங்குலி விளாசினார். இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இடது கை இந்திய பேட்ஸ்மேனின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக இன்றும் திகழ்கிறது
Image Source: instagram-com/souravganguly
2004ல் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் எனும் பெருமையும் சவுரவ் கங்குலிக்கு உள்ளது. ஆனால், 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளை ராகுல் டிராவிட் வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது
Image Source: instagram-com/souravganguly
சவுரவ் கங்குலியும், சச்சின் டெண்டுல்கரும் 176 போட்டிகளில் ஒன்றாக விளையாடி, 8227 ரன்கள் குவித்துள்ளனர். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த ஜோடியாக இன்றும் திகழ்கிறார்கள்
Image Source: x-com
Thanks For Reading!