Jul 15, 2024
முளைகட்டிய தானியங்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதனால் இதனை தினமும் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் இத்தகைய முளைகட்டிய பயறுகளை எந்நேரத்தில் சாப்பிடுவது நல்லது என்பதை தான் இப்பதிவில் பார்க்கவுள்ளோம்.
Image Source: istock
முளைகட்டிய தானிய வகைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அல்சர், செரிமான கோளாறு போன்ற தொந்தரவுகள் ஏற்படக்கூடும். எனவே இதனை காலையில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
Image Source: istock
முளைகட்டிய பயறுகளை மதிய வேளையில் சாப்பிடுவது மிகவும் நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Image Source: istock
முளைகட்டிய கொள்ளு பயறை சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும் மற்றும் உடல் எடையை குறைக்கவும் இது பயன்படுகிறது.
Image Source: istock
முளைகட்டிய எள்ளு சாப்பிட்டு வந்தாலும் உடல் எடை குறைய துவங்கும். அதே போல் கோதுமையை முளைகட்டி சாப்பிட்டு வர புற்றுநோய் ஏற்படும் அபாயத்தில் இருந்து தப்பலாம்.
Image Source: istock
முளைகட்டிய பச்சை பயறு பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்சனையை குணப்படுத்துவதோடு, ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவினையும் குறைக்கிறது.
Image Source: istock
உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் முளைகட்டிய வெள்ளை கொண்டைக்கடலையை சாப்பிடலாம். இது அவர்களுக்கு தேவையான ஆரோக்கிய பண்புகளை கொடுக்கும்.
Image Source: istock
பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு கருப்பு உளுந்தை முளைகட்டி சாப்பிட கொடுக்கலாம். இது பால் சுரப்பினை அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள்.
Image Source: istock
முளைகட்டிய தானிய வகைகளை காலையில் சாப்பிடுவதை தவிர்ப்பது போல் இரவில் சாப்பிடுவதையும் முடிந்தளவு தவிர்த்து கொள்ளுங்கள். ஏனெனில் இது ஜீரணிக்க நேரம் எடுக்கலாம். சாயந்திர நேரத்தில் ஆரோக்கியமற்ற ஸ்நேக்ஸ் வகைகளை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக முளைகட்டிய தானிய வகைகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.
Image Source: pexels-com
Thanks For Reading!