[ad_1] முளைகட்டிய வெந்தயம் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் தெரியுமா ?

Jul 18, 2024

முளைகட்டிய வெந்தயம் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் தெரியுமா ?

Nivetha

வெந்தயம்

வெந்தயத்தில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன. உடல் ஆரோக்கியத்திற்கு ஒரு மாதத்திற்கு 8 ஸ்பூன் வெந்தயம் சாப்பிட்டாலே போதுமானது என்பது நிபுணர்கள் கருத்து. இந்நிலையில் முளைகட்டிய வெந்தயம் யாருக்கு மிகவும் நல்லது, என்னென்ன பயன்கள் அளிக்கிறது என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

Image Source: istock

முளைகட்டிய வெந்தயம்

வெந்தயத்தை முளைகட்டி சாப்பிட்டு வந்தால் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகளவு சுரக்கும். பச்சிளம் குழந்தைகளின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். இது பாட்டிக்கால வைத்தியமாகும்.

Image Source: istock

நீரிழிவு நோயாளிகள்

முளைகட்டிய வெந்தயத்தை நீரிழிவு நோயாளிகள் தினமும் கால் டீஸ்பூன் சாப்பிட்டு வரும் பட்சத்தில் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு குறையும்.

Image Source: istock

மாதவிடாய்

மாதவிடாய் காலத்தில் வலியால் அவதிப்படும் பெண்கள் தினமும் தங்கள் உணவு வழக்கத்தில் முளைகட்டிய வெந்தயத்தை சேர்த்து கொள்ள வேண்டும். இது அந்நேரத்தில் வலி ஏற்படாமல் வலி நிவாரணியாக செயல்படும்.

Image Source: istock

ஹார்மோன் சமநிலை

மாதவிடாய் நின்ற பெண்களும் இந்த முளைகட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிட வேண்டும். இது ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்க உதவும்.

Image Source: istock

உடல் பருமனை குறைக்கும்

முளைகட்டிய வெந்தயத்தில் நார்சத்து அதிகம், இதனால் இது நிறைவான உணர்வினை தருகிறது. இதனால் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் இருக்கும், அதனால் அதிகளவு, அடிக்கடி சாப்பிடுவது கட்டுப்படுத்தப்பட்டு, உடல் பருமனை குறைக்க பயன்படுகிறது.

Image Source: pexels

இதய நோய்

முளைகட்டிய வெந்தயத்தை உட்கொள்வதன் மூலம் உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் வெளியேற்றப்பட்டு, நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கும். இதனால் இருதய ஆரோக்கியம் மேம்படுவதோடு, இருதய நோய்கள் ஏற்படும் அபாயமும் குறையும்.

Image Source: istock

ஜீரண சக்தி

முளைகட்டிய அல்லது உலர்ந்த வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி மேம்படும். இதன் கசப்பு தன்மை காரணமாக பலரும் இதனை சாப்பிட சிரமப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் வெந்தயத்தை முளைக்கட்டி சாப்பிட்டால் சுவையும் சற்று நன்றாக இருக்கும்.

Image Source: istock

Stomach Pain

உலர்ந்த வெந்தயத்தை அப்படியே சாப்பிட்டால் சில நேரம் வயிறு உப்பசம், வாயு தொந்தரவு உள்ளிட்டவை ஏற்படக்கூடும். எனவே, வெந்தயத்தை முளைகட்டி அல்லது ஊறவைத்து அதன் தண்ணீரை உட்கொள்வதே சிறந்ததாகும்.

Image Source: Samayam Tamil

Thanks For Reading!

Next: தயிரில் கருப்பு உப்பு சேர்த்து சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் தெரியுமா ?

[ad_2]