Aug 3, 2024
மனிதர்கள் உடலில் மிக முக்கியமான பகுதிகளுள் ஒன்று முழங்கால்கள், இது மிக முக்கியமான மூட்டுகளில் ஒன்று என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த முழங்கால் வலி என்பது பலருக்கும் இருக்கும் ஓர் பொதுவான பிரச்சனை என்றாலும் இது வயது முதிர்வு பெறுகிறது என்பதை குறிப்பதாக கூறப்படுகிறது.
Image Source: istock
உங்கள் முழங்கால்கள் பலவீனமடைந்தால் அதிக தூரம் நடப்பது, பாரம் தூக்கி நடப்பது போன்ற உங்கள் அன்றாட இயக்கங்களில் இடையூறு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமுள்ளன. அதனால் நமது முழங்கால்களை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். அதற்கான ஓர் பதிவு தான் இது
Image Source: istock
சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், நடைப்பயிற்சி போன்ற எளிதான மற்றும் குறைந்த தாக்கத்தினை ஏற்படுத்தும் பயிற்சிகளை செய்யுங்கள். எந்தவொரு பயிற்சியினை மேற்கொள்வதற்கு முன்னரும் வார்ம் அப் செய்வது அவசியம்.
Image Source: istock
குறிப்பாக முழங்கால் ஆரோக்கியத்திற்கு நடைப்பயிற்சி மற்றும் ட்ரெட்மில் பயிற்சி இன்றியமையாத ஒன்றாகும். முடிந்தளவு வீடு அல்லது ஆபீஸ் போன்ற வெளியிடங்களில் குறைந்த தளம் என்றால் லிஃப்ட்களை பயன்படுத்தாமல் படிகளை பயன்படுத்தி ஏறி செல்வது நல்லது.
Image Source: istock
அதே போல் முழங்கால்களுக்கு அதிக தாக்கம் கொடுக்கும் செயல்களை தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஜாகிங் செல்வது, கால்பந்து, கூடை பந்து போன்ற அதிக தாக்கம் கொடுக்கும் செயல்களில் ஈடுபடாமல் தவிர்க்க வேண்டும்.
Image Source: istock
பெண்கள் தங்கள் கால்களுக்கு ஹை ஹீல்ஸ்களை அணிவது அவர்களது கால்கள் மற்றும் முழங்கால்களில் அதிகளவு அழுத்தத்தை ஏற்படுத்தும். அதனால் சரியான உயரம் குறைந்த காலணிகளை பயன்படுத்துவது முழங்கால்களுக்கு நல்லது, பக்க விளைவுகளும் ஏற்படாது.
Image Source: istock
அதிகளவு ஓட்டம் என்பது குருத்தெலும்பு பகுதிகளில் தேய்மானம் ஏற்படும் என்று கூறுகிறார்கள். இந்த தேய்மானம் வருங்காலத்தில் கீல்வாதம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.
Image Source: pexels
ஒருவேளை நீங்கள் ஓட்ட பந்தயம் போன்றவற்றில் ஆர்வம் மிகுந்தவர்கள் என்றால் உங்கள் முழங்கால்கள் பாதிப்படையாமல் இருக்க ஓட்ட பயிற்சியாளர் அல்லது ஒரு உடல் சிகிச்சை நிபுணரை அணுகி இது சார்ந்த ஆலோசனைகளை பெற்று அதற்கு ஏற்ப செயல்படுங்கள்.
Image Source: istock
அதிகளவு சோடியம் உட்கொள்ளல், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவைகளும் முழங்கால்கள் பலவீனமடைய காரணமாக அமைகிறது. இதுமட்டுமல்லாமல் புகை பிடிப்பது, மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களும் முழங்கால் பலவீனத்திற்கு முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது.
Image Source: pexels
Thanks For Reading!