Jun 21, 2024
நம் உடல் மற்றும் மனம் இரண்டின் ஆரோக்கியத்தை காக்கும் உடற்பயிற்சிகளில் யோகா முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், இந்த யோகாசனங்களில் நம் மூட்டுகளில் நலம் காக்க உதவும் ஒரு சில பயிற்சிகள் பற்றி இங்கு காணலாம்!
Image Source: istock
குத்த வைத்து அமர்ந்து செய்யப்படும் இந்த ஆசனம் ஆனது, சீரான குடல் இயக்கம் மற்றும் சிறுநீர் ஓட்டத்தை உறுதி செய்வதோடு, கால் மூட்டுகளில் வலிமையையும் உறுதி செய்கிறது.
Image Source: istock
கால் மூட்டுகளில் வலிமை சேர்ப்பதோடு, முதுகெலும்பு பகுதியில் நெகிழ்வுத்தன்மையை உறுதி செய்யும் இந்த ஆசனம் ஆனது 30 வயதுக்கு பின் உண்டாகும் மூட்டு வலி பிரச்சனைகளை தடுக்கிறது.
Image Source: istock
உடலை பின்னோக்கி வலைத்தபடி செய்யப்படும் இந்த ஆசனம் ஆனது, முழு உடல் நீட்சிக்கு உதவுவதோடு, மூட்டுகளில் வலிமை சேர்த்து வாத பிரச்சனைகள் உண்டாகும் அபாயத்தை குறைக்கிறது.
Image Source: istock
கால்களை பின்னோக்கி வளைத்து, பாதங்களை ஒண்றாக இணைத்து, முழு உடல் எடையையும் பாதங்கள் மீது அமரச்செய்யும் இந்த ஆசனம், மூட்டுகளின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது.
Image Source: istock
முக்கோணம் வடிவில் உங்கள் உடலை மடிக்கும் ஒரு ஆசனம். இந்த ஆசனம், உடல் எலும்புகளின் வலிமையை உறுதி செய்வதோடு, மூட்டுகளில் உண்டாகும் பிரச்சனைகளை தடுக்கவும் உதவுகிறது.
Image Source: istock
உடலை சர்க்கரம் போல் பின்னோக்கி வளைக்கும் இந்த பயிற்சி, குடல் இயக்கங்களை மேம்படுத்துவதோடு, மூட்டுகளின் வலிமையை அதிகரித்து, ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கிறது!
Image Source: pexels-com
தடாசனம் ஒரு ஆரம்ப நிலை ஆசனம் ஆகும். ஆரம்ப நிலை யோகா பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்ற ஒரு ஆசனமான இது, மூட்டுகளில் வலிமை சேர்த்து மூட்டுகள் தொடர்பான ஆரோக்கிய சிக்கல்களை தடுக்கிறது.
Image Source: istock
தனி நபரின் உடல் நிலை மற்றும் எடை பெறுத்து இந்த ஆசனங்களின் பலன் மாறுபடலாம்; ஒரு சிலருக்கு எதிர்மறை விளைவுகளை உண்டாக்கலாம். எனவே, இந்த பயிற்சிகளை செய்யும் முன் நிபுணர் ஆலோசனை பெறுவது நல்லது!
Image Source: istock
Thanks For Reading!