[ad_1] மூல நோய் தொடர்பாக பரவும் வதந்திகளும் - உண்மைகளும்!

May 18, 2024

மூல நோய் தொடர்பாக பரவும் வதந்திகளும் - உண்மைகளும்!

mukesh M

மூலம் என்றால் என்ன?

ஆசன வாயின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதியில் கூடுதல் சதைகள் வளர்ந்து, குத வாயிலை அடைக்கும் பிரச்சனைக்கு மூலம் என பெயர். இந்நிலையில், இந்த மூல நோய் தொடர்பாக பரவும், வதந்திகள் மற்றும் உண்மைகள் பற்றி இங்கு காணலாம்!

Image Source: istock

ஒரு சிலரை மட்டுமே பாதிக்கிறது?

நிபுணர்கள் கூற்றுப்படி மூலம் ஆனது உலகில் உள்ள 75% மக்கள் தங்கள் வாழ்வில் ஏதேனும் ஒரு வகையில் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை ஆகும். குறிப்பாக, 50 வயதை நெருங்கும் நபர்களுக்கு இது இயல்பான ஒன்று ஆகும்!

Image Source: istock

முதியவர்களை மட்டும் தான் பாதிக்குமா?

50 வயதை நெருங்கும் நபர்களுக்கு இந்த பிரச்சனை இயல்பான ஒன்றாக இருப்பினும், முதியவர்களை மட்டுமே இது பாதிப்பது இல்லை. இளம் வயதினரையும் அதிகம் பாதிக்கிறது.

Image Source: istock

அறுவை சிகிச்சை மட்டும் தான் முடிவா?

மூல நோயின் நிலை பொறுத்து அறுவை சிகிச்சையின் தேவை மாறுபடுகிறது. அதாவது, மிகவும் அரிதான சூழ்நிலையிலேயே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. மற்ற நேரங்களில் மருந்து பயன்படுத்தி கரைக்கலாம்!

Image Source: istock

காரமான உணவு மூல நோயை உண்டாக்கும்!

மூல நோய்க்கும் காரமான உணவுக்கும் நேரடி தொடர்புகள் இல்லை. இருப்பினும், காரமான உணவுகள் வளர்சிதை மாற்றத்தை பாதித்து, மூல நோய்க்கு மறைமுகமாக வழிவகுக்கலாம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்!

Image Source: istock

குளிர்ச்சியான தரை காரணமாக இருக்குமா?

நிபுணர்கள் கூற்றுப்படி இது தவறான ஒரு புரிதல். மூல நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் ஐஸ்கட்டி (பை) மீது அமர பரிந்திருக்கையும் நிலையில், குளிர்ச்சியான தரைக்கும் மூல நோய்க்கும் தொடர்பு இல்லை என உறுதியாகிறது.

Image Source: istock

உடற்பயிற்சி கூடாது!

மூல நோய் உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்ய கூடாது என பலரும் நம்புகின்றனர். உண்மையில், மூல நோயை குணப்படுத்த எளிமையான உடற்பயிற்சிகள் உதவும், அதேநேரம் கடுமையான உடற்பயிற்சிகளை தவிர்ப்பது நல்லது!

Image Source: pexels-com

புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்?

மூல நோய் ஆனது புற்றுநோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம் என பலரும் நம்பும் நிலையில், மூல நோய் உள்ளவர்கள் அனைவருக்கும் புற்றுநோய் வருவது இல்லை - அதேநேரம் ஒரு சிலருக்கு பெருங்குடல் புற்றுநோய் ஏற்படலாம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்!

Image Source: istock

ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்வது?

உடல் இயக்கத்தை குறைத்துக் கொண்டு ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருப்பது மூல நோய்க்கு வழிவகுக்கும் என பலரும் நம்புகின்றனர். நிபுணர்கள் கூற்றுப்படி இது ஓரளவுக்கு உண்மை ஆகும். ஒரே இடத்தில் அமர்வது, ஆசண வாய் பகுதியில் உஷ்ணத்தை உண்டாக்கி - மூலத்திற்கு காரணமாகிறது!

Image Source: istock

Thanks For Reading!

Next: குடல் ஆரோக்கியம் தொடர்பாக ஒரு சில உண்மைகள் உங்களுக்காக!

[ad_2]