[ad_1] ​மூளையை இளமையாக வைத்துக்கொள்ள சாப்பிடவேண்டிய உணவுகள்

Jun 20, 2024

​மூளையை இளமையாக வைத்துக்கொள்ள சாப்பிடவேண்டிய உணவுகள்

Nivetha

​மூளைக்கான உணவுகள் குறித்த ஆய்வு

ஹார்டுவேர்ட் பல்கலைக்கழகத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மனநல மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் கடந்த 20 ஆண்டுகளாக மூளையை இளமையாக ஆரோக்கியமாக வைத்து கொள்ளும் உணவுகள் குறித்து ஆய்வு ஒன்றினை மேற்கொண்டார். அதன் விவரங்களை இப்பதிவில் பார்ப்போம்.

Image Source: istock

​தயிரும் பாலாடைக்கட்டியும்

தயிர் மற்றும் பாலாடை கட்டிகளில் நல்ல பாக்டீரியாக்களை கொண்ட ப்ரோபயோடிக் நிறைந்துள்ளது. இது செரிமான பிரச்சனையை தீர்ப்பதோடு குடலுக்கும் நன்மை பயக்கிறது.

Image Source: istock

​நட்ஸ்கள் மற்றும் பெர்ரி

செரிமானத்தினை மேம்படுத்தக்கூடிய நார்சத்து இவைகளில் நிறைந்துள்ளது. மேலும் பெர்ரியில் உள்ள ஆன்டி -ஆக்சிடெண்ட்ஸ் உடல் மற்றும் மூளையில் ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தினை குறைக்கிறது.

Image Source: pexels

​கீரைகள்

கீரை வகைகளில் வைட்டமின் பி9 மற்றும் ஃபோலெட் அதிகளவில் உள்ளது. இது மூளையின் ஆற்றலை குறைக்கும் தன்மையினை தாமதப்படுத்த கூடியது. எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது மூளைக்கு நல்லது.

Image Source: pexels

​டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் உள்ள ஃபிளாவனாய்டுகள் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் சக்தியினை அதிகரிக்குமாம். இதனை சாப்பிடுவதனால் ஞாபக சக்தி, மூளை செயல்திறன் உள்ளிட்டவையும் மேம்படும்.

Image Source: pexels

​பீன்ஸ்

ப்ரோட்டீன் மற்றும் தாதுக்கள் நிறைந்த பீன்ஸை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் மூளை ஆரோக்கியமாக இருப்பதோடு கற்று கொள்ளுதல், சிந்திக்கும் திறன் உள்ளிட்டவற்றை அதிகரிக்க உதவுகிறது.

Image Source: istock

​புதினா, கொத்தமல்லி

புதினா, கொத்தமல்லி, துளசி போன்றவைகள் உடலுக்கு பல்வேறு ஆரோக்கியத்தை வழங்குகிறது. இதனை சாப்பிட்டால் இதிலுள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுக்கள் தேவையற்ற அழுத்தத்திலிருந்து மூளையினை பாதுகாக்கிறது.

Image Source: pexels

முட்டை

மற்ற அசைவ உணவுகளை விட முட்டையில் வைட்டமின் பி12 குறைவு தான் என்றாலும், இதனை தினமும் சாப்பிடுவதால் மூளை இளமையாக செயல்படும்.

Image Source: Samayam Tamil

​சால்மன் மீன்

இந்த சால்மன் மீனை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் இதில் நிறைந்துள்ள வைட்டமின் பி சத்துக்கள் மூளைக்கு ஆரோக்கியத்தினை அளிக்கும்.

Image Source: istock

Thanks For Reading!

Next: சர்க்கரை நோயாளிகளுக்கு ‘வைட்டமின் சி’ நல்லதா?

[ad_2]