May 22, 2024
நமது மூளை உடலின் பெரும்பாலான செயல்பாடுகளை கட்டுப்படுத்த உதவுகிறது. உணர்வுகளைப் பெற்று ஒருங்கிணைத்து மற்ற பகுதிகளுக்கு அனுப்ப உதவுகிறது. இது போன்ற மூளையின் செயல்பாடுகளை பாதிக்கக்கூடிய உணவுகளைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Image Source: istock
அதிக அளவில் சர்க்கரை நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் மூளையில் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் ஏற்படும். இது மூளையில் உள்ள நியூரான்களை சேதப்படுத்தி மூளையின் செயல்பாட்டை பாதிக்கும்.
Image Source: istock
பொதுவாகவே பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பவை. இவற்றில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் ரசாயனங்கள் சேர்க்கப்படுவதால் இவை மூளை ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.
Image Source: istock
பதப்படுத்தப்பட்ட மற்றும் வறுத்த உணவுகளில் ட்ரான்ஸ் கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவை மூளையில் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் வீக்கத்தின் அளவை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். இதனால் மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு அறிவாற்றலை இழக்கும்.
Image Source: istock
தினசரி உணவில் குறைந்த அளவு சோடியம், அதாவது உப்பினை பயன்படுத்தலாம். அதிக அளவில் சோடியம் நிறைந்த உணவுகள் உயர் ரத்த அழுத்த பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதனால் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
Image Source: istock
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்கள் உள்ளன. இது மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தி ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
Image Source: istock
எண்ணெயில் வறுக்கப்படும் உணவுகள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பவை என்பது நாம் அறிந்ததே. அதிக வெப்பநிலையில் வறுக்கப்படும் உணவுகளை உட்கொள்வதால் மூளையின் செயல்பாடு பாதிக்கிறது.
Image Source: pexels-com
அதிகமாக மது அருந்துவதால் நரம்பியல் கடத்தியின் செயல் பாதிக்கப்படுகிறது. இதனால் மூளைக்கு சேதம் ஏற்பட்டு நினைவாற்றலை இழக்கும் வாய்ப்புகள் அதிகம். இது டிமென்ஸியா போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
Image Source: istock
மீன்களில் மெர்குரியின் அளவு அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக சுறா மீன், வால்மீன்கள், கானாங்கெளுத்தி போன்றவற்றில் அதிக அளவிலான மெர்குரி நிறைந்துள்ளது. இது மூளையில் குவிய தொடங்கி நரம்பியல் செயல்பாட்டை பாதிக்கிறது.
Image Source: istock
Thanks For Reading!