Aug 20, 2024
நமது உடலில் இருக்கும் உறுப்புகளுள் இதயம் எப்படி மிக முக்கியமோ, அதே போல் மூளையும் முக்கியமான உறுப்பாகும். இது நல்ல முறையில் செயல்படும் பட்சத்தில் தான் நமது உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் சீராக இருக்கும்.
Image Source: istock
மூளையில் ஏகப்பட்ட நரம்புகள் இயங்கி கொண்டிருக்கும். அதன்படி, நியூரோ ஜெனிசிஸ் என்னும் மூளையின் ஒரு பகுதியில் இருந்து தான் புதிய புதிய நரம்பு செல்கள் உருவாகிறது என்று கூறப்படுகிறது. அதில் ஒரு பகுதியாக தான் 'ஹிப்போ கேம்பஸ்' உள்ளது.
Image Source: istock
மூளையில் இருக்கும் இந்த 'ஹிப்போ கேம்பஸ்' என்னும் பகுதியில் தான் நமது நினைவாற்றல் உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. அப்படி இருக்கையில், நாம் உடற்பயிற்சி மேற்கொள்ளும் பொழுது அப்பகுதிகளில் புதிய நரம்பு செல்கள் உருவாகும் என்று கூறப்படுகிறது.
Image Source: istock
மூளை வளர்ச்சிக்கு தேவையான உடற்பயிற்சிகள் அறிந்து அதனை செய்து வருவதன் மூலம் மூளையில் இருக்கும் 'பிளாஸ்டிசிட்டி' என்னும் நரம்பு செல்களுக்கு இடையேயான தொடர்புகள் அதிகரிக்கும்.
Image Source: istock
மூளை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கும் உடற்பயிற்சி செய்வதற்கும் இடையே என்ன சம்மந்தம் என்று பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 8 வயது முதல் 80 வயது வரை உடற்பயிற்சி செய்வதன் மூலம் மூளை வளர்ச்சி மேம்படும் என்று தெரியவந்துள்ளது.
Image Source: istock
மேலும் நாம் தினசரி உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால் அல்சைமர்ஸ், பார்க்கின்சன்ஸ், மன அழுத்தம் உள்ளிட்ட மூளை சார்ந்த எவ்வித நோய்களும் ஏற்படாமல் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
Image Source: istock
மூளை வலுப்பெற்று நன்கு செயல்பட உடற்பயிற்சிகள் அவசியம் என்பதால் மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் இளம் வயதினர் அதனை தவறாமல் செய்ய வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் தினமும் 30 நிமிடங்கள் இந்த பயிற்சிகளை மேற்கொண்டாலே போதுமானது.
Image Source: istock
ஒரு சிலர் தீவிரமான உடற்பயிற்சிகளை செய்து பழக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் என்று தினமும் 20 நிமிடங்கள் தவறாமல் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வயதிற்கு ஏற்ப உடற்பயிற்சிகளும் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Image Source: pexels
எந்த காரணத்திற்காக நாம் உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறோம் என்பதை பொருட்டு, பயிற்சிகள் மாறுபடும் என்பதால் அது குறித்த விவரங்களை உடற்பயிற்சியாளரிடம் கேட்டு தெளிவு பெற்று பயிற்சியினை துவங்குவது நல்லது.
Image Source: istock
Thanks For Reading!