[ad_1] யார் இந்த அசுவத்தாமன்? அவர் ஏன் கிருஷ்ணரால் சபிக்கப்பட்டார்?

யார் இந்த அசுவத்தாமன்? அவர் ஏன் கிருஷ்ணரால் சபிக்கப்பட்டார்?

Pavithra, Samayam Tamil

Jul 24, 2024

அசுவத்தாமன்!

கல்கி 2898 AD திரைப்படத்தின் மூலம் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ஒரு மகாபாரத கதாப்பாத்திரம் அசுவத்தாமன். மகாபாரதத்தின் முக்கிய வீரனான அசுவத்தாமனின் பக்தி, நட்பு, போர்த் திறன், வீரம் மற்றும் சாபம் பற்றி சுருக்கமாக இங்கு பார்க்கலாம்.

Image Source: instagram-com

துரோணரின் மகன்!

துரோணரின் மகன்!

மகாபாரதத்தில் முக்கிய போர்வீரர்களுள் ஒருவரும், பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் குருவுமான துரோணரின் மகன் இந்த அசுவத்தாமன்.

Image Source: instagram-com

தவத்தின் பலன்!

குரு துரோணாச்சாரியார் மற்றும் அவரது மனைவி கிரிபி ஆகியோரின் தவத்தின் பலனாய் சிவபெருமானால் ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தையே அசுவத்தாமன்.

Image Source: instagram-com

தெய்வீக ரத்தினம்!

அசுவத்தாமன் தனது நெற்றியில் ‘சிரோன் ரத்தினம்’ எனப்படும் தெய்விக ரத்தினத்துடனே பிறந்தார் என்றும் இது அவருக்கான ஆற்றலையும் சக்தியையும் வழங்கியது என்றும் சொல்லப்படுகிறது.

Image Source: instagram-com

நாகாஸ்திரம்!

அசுவத்தாமன் போர்க் களத்தில் எதிரிகளை முற்றிலுமாக அழித்துவிடும் அதிசக்தி வாய்ந்த ஆயுதமாகக் கருதப்படும் நாகாஸ்திரத்தை கொண்டிருந்தார்.

Image Source: instagram-com

கௌரவர்களின் தோழமை!

துரியோதனனிடம் தீவிர நட்பு பாராட்டிய அசுவத்தாமன் கௌரவர்கள் செய்த அனைத்து தவறுகளுக்கும் நட்பின் பெயரில் விசுவத்துடன் துணை நின்றார்.

Image Source: instagram-com

பழிவாங்கும் சபதம்!

குருக்‌ஷேத்திர போரில் கௌரவர்கள் சார்பாகப் போரிட்ட அசுவத்தாமன் துரியோதனன் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டதாகக் கருதி பாண்டவர்களைப் பழி தீர்ப்பதாக சபதம் எடுத்தார்.

Image Source: instagram-com

அத்துமீறிய தாக்குதல்!

போர் முடிந்த இரவு பாண்டவர்களின் முகாமிற்குள் நுழைந்து திரௌபதையின் 5 மகன்களைக் கொன்றதோடு, உத்திரையின் கருவிலிருந்த குழந்தையைக் கொல்ல நாகாஸ்திரத்தை பயன்படுத்தினார்.

Image Source: instagram-com

கிருஷ்ணரின் சாபம்!

இந்த கொடூரச் செயலுக்காகக் கலியுகம் முடியும் வரை வியாதிகளாலும், துன்பங்களாலும் அவதிப்படும்படி கிருஷ்ணரால் சபிக்கப்பட்டார். இன்றும் இவர் சாப விமோச்சனம் வேண்டி உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

Image Source: instagram-com

Thanks For Reading!

Next: என்னது.. இத்தனை கோடியா.. பாலிவுட் பிரபலங்களின் சொகுசு கார்கள்!

[ad_2]