Aug 3, 2024
இந்தியா சார்பில் பல முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுத்துள்ள வீராங்கனை அசுவினி பொன்னப்பா குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் குறித்தும், இந்தியாவிற்காக இவர் வென்ற பதக்கங்கள் எத்தனை? என்பது குறித்தும் இங்கு காணலாம்!
Image Source: instagram-com/p9ashwini
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த செப்டம்பர் 18, 1989-ல் பிறந்த இவர் படிப்பை பெங்களூருவில் முடித்தார். பின் ஐதராபாத் நகருக்கு இடம் பெயர்ந்தார்!
Image Source: instagram-com/p9ashwini
அசுவினி பொன்ப்பாவின் தந்தை MA பொன்னப்பா, இந்தியாவிற்காக ஹாக்கி விளையாடிவர். மற்றும் இவரது உறவினர்கள் பலரும் தடகளம், கிரிக்கெட் என பல்வேறு விளையாட்டுகள் மூலம் இந்தியாவின் விளையாட்டு துறைக்கு பங்களிப்பு அளித்தவர்கள்.
Image Source: instagram-com/p9ashwini
உலக மக்களின் கவனத்தை ஈர்த்த அசுவினி பொன்னப்பா, தனது முதல் தேசிய அளவிலான பட்டத்தை 2001-ஆம் ஆண்டு ‘சப்-ஜூனியர் பெண்கள்’ பிரிவில் வென்றார். தொடர்ந்து 2004 மற்றும் 2005-ஆம் ஆண்டுகளில் இரட்டையர் பிரிவு பட்டத்தை வென்றார்.
Image Source: instagram-com/p9ashwini
2011-ஆம் ஆண்டு நடைப்பெற்ற உலக சாம்பியன்சிப் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் பங்கெடுத்த அசுவினி பொன்னப்பா, வெண்கலப் பதக்கம் வென்று தனது முதல் உலக சாம்பியன்சிப் பதக்கத்தை பதிவு செய்தார்.
Image Source: instagram-com/p9ashwini
2010-ஆம் ஆண்டு நடைப்பெற்ற காமென்வெல்த் போட்டிகளில் பெண்கள் இரட்டையர் பிரிவில் பங்கெடுத்த அசுவினி பொன்னப்பா தங்கம் வென்றார். தொடர்ந்து 2018-ஆம் ஆண்டு கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார்!
Image Source: instagram-com/p9ashwini
2010-ஆம் ஆண்டு தாக்காவில் நடைப்பெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் ஒரு தங்கம், பெண்கள் அணி சார்பில் ஒரு தங்கம் என 2 தங்கம் வென்றார். இதேப்போன்று 2016-ஆம் ஆண்டு போட்டிகளிலும் 2 தங்கம் வென்றார்.
Image Source: instagram-com/p9ashwini
இதேபோன்று 2024-ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஆசிய குழு சாம்பியன்சிப் போட்டியில் தங்கம் வென்ற பெண்கள் அணியில், அசுவினி பொன்னப்பா இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
Image Source: instagram-com/p9ashwini
2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் இரட்டையர் பிரிவில் ஜவலா கட்டா-வுடன் இணைந்து விளையாடினார். எனினும், இந்த ஜோடி குழு போட்டிகளுடன் வெளியேறியது!
Image Source: instagram-com/p9ashwini
Thanks For Reading!