Aug 6, 2024
மகளிர் ஈட்டி எறிதல் போட்டிகளில் சாதனைகள் பல புரிந்த இந்திய மங்கை ‘அன்னு ராணி’ பற்றி பலரும் அறியாத சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு நாம் காணலாம்!
Image Source: instagram-com/annurani_
உத்திரபிரதேச மாநிலம் மீரட்டின் பகதூர்பூர் எனும் சிறு கிராமத்தில் 1992-ஆம் ஆண்டு பிறந்த அன்னு ராணியின் தந்தை ஒரு விவசாயி. குடும்ப நபர்கள் அனைவரும் விவசாயத்தை மட்டுமே பழகியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது!
Image Source: instagram-com/annurani_
அன்னு ராணியின் இந்த திறமையை முதன் முதலில் கண்டறிந்தவர் அவரது அண்ணன் உபேந்திரா தான். தந்தையின் எதிர்ப்பை மீறி, தனது தங்கையை ஈட்டி எறிதல் வீராங்கனையாக்க வேண்டும் என கடும் முயற்சி எடுத்துள்ளார்!
Image Source: instagram-com/annurani_
தொழில்முறை ஈட்டி வாங்குவதற்கு தேவையான பணம் இன்றி, மூங்கிள் கொம்புகளை பயன்படுத்தி பயிற்சி எடுத்துள்ளார் அன்னு. 2010-ஆம் ஆண்டு (தனது 18-வது வயதில்) துவங்கிய அன்னுவின் இந்த பயிற்சி, ஆரம்ப காலத்தில் அவரது வயல்வெளிகளில் நிகழ்ந்தது!
Image Source: instagram-com/annurani_
கடுமையான பயிற்சிக்கு பின் 2014-ஆம் ஆண்டு லக்னோவில் நடைப்பெற்ற National Inter-State சாம்பியன்சிப் போட்டிகளில் பங்கெடுத்து அன்னு 58.83m தூரத்திற்கு ஈட்டி எறிந்து தேசிய அளவு சாதனை படைத்தார். இந்த சாதனைக்கு பின் தன் தந்தையின் ஆதரவையும் பெற்றார்!
Image Source: instagram-com/annurani_
2019-ஆம் ஆண்டு தோஹாவில் நடைப்பெற்ற உலக தடகள சாம்பின்ஷிப் போட்டிகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அன்னு, பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இறுதி போட்டிக்கு தகுதிப் பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமை பெற்றார்!
Image Source: instagram-com/annurani_
இதேப்போன்று 2022-ல் பர்மிங்காமில் நடைப்பெற்ற காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், காமன்வெல்த் போட்டிகளில் ஈட்டி எறிதல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் எனும் பெறுமை பெற்றார்!
Image Source: instagram-com/annurani_
ஈட்டி எறிதல் பிரிவில் படிப்படியாக வளர்ந்து வரும் அன்னு ராணி, கடந்த 2022-ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ந்தார்!
Image Source: instagram-com/annurani_
முன்னதாக 2020-ஆம் ஆண்டு நடைப்பெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்ற அன்னு பதக்த்தை தவறவிட்டார். இருப்பினும், ஈட்டி எறிதல் பிரிவில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய பெண் எனும் பெருமை பெற்றார்!
Image Source: instagram-com/annurani_
Thanks For Reading!