[ad_1] யார் இந்த சுனைனா? பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்!

யார் இந்த சுனைனா? பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்!

mukesh M

Jul 3, 2024

யார் இந்த சுனைனா?

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை சுனைனா. கடந்த சில தினங்களாக இவரது திருமண செய்தி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இவர் தொடர்பான சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்!

Image Source: x-com/thesunainaa

வட இந்தியாவை சேர்ந்தவர்!

வட இந்தியாவை சேர்ந்தவர்!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து நிற்கும் சுனைனா, உண்மையில் ஒரு வட இந்தியர். மகாராஸ்டிர மாநிலம் நாக்பூரில் கடந்த 1989-ஆம் ஆண்டு இவர் பிறந்தார்.

Image Source: x-com/thesunainaa

வர்த்தக துறை மாணவி!

நாக்பூர் மவுண்ட் கார்மல் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்த சுனைனா, தனது இளங்கலை படிப்பை வர்த்தக துறையில் தொடர்ந்தார். இதற்கிடையில் மாடலிங் துறையிலும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்!

Image Source: x-com/thesunainaa

நடிக்கும் வாய்ப்பு?

மாடலிங் துறையில் பயணிக்க துவங்கிய சுனைனாவுக்கு 2005-ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான குமார் vs குமாரி திரைப்படத்தில் நடிக்கும் வாப்பு கிடைத்து. அதாவது, தனது 26-வது வயதில் முதல் படத்தில் இவர் நடித்தார்!

Image Source: x-com/thesunainaa

தெலுங்கு to மலையாளம்!

குமார் vs குமாரி திரைப்படத்திற்கு பின் Something Special, 10th Class போன்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்த சுனைனாவுக்கு 2006-ஆம் ஆண்டு வெளியான Best Friends எனும் மலையாள திரைப்படம், மல்லுவுட்டில் கால் பதிக்க பாதை அமைத்து கொடுத்தது!

Image Source: x-com/thesunainaa

கன்னட திரையுலக அறிமுகம்!

தொடர்ந்து 2008-ஆம் ஆண்டு கங்கே பாரே, துங்கே பாரே எனும் கன்னடா திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகிலும் என்டரி கொடுத்தார். ஆக, வெறும் 3 ஆண்டுகளில் மூன்று திரையுலகிலும் அறிமுகமானார்!

Image Source: x-com/thesunainaa

தமிழில் அறிமுகம் எப்போது?

2008-ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘காதலில் விழுந்தேன்’ திரைப்படம் தான் சுனைனாவின் தமிழ் அறிமுக திரைப்படம். இத்திரைப்படத்தின் நாக்க முக்கா பாடலுக்காக படம் மாபெறும் வெற்றி கண்டது.

Image Source: x-com/thesunainaa

சினிமாவில் எழுச்சி!

காதலில் விழுந்தேன் திரைப்படத்திற்கு பின் சுனைனாவிற்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்தது. தமிழில் மட்டும் 13 படங்களை நடித்து முடித்தார். இதில் நீர்ப்பறவை, வம்சம் போன்றவை குறிப்பிடத்தக்க படங்கள் ஆகும்!

Image Source: x-com/thesunainaa

வெப் சீரிஸில் மிரட்டும் சுனைனா!

நீர்பறவை, சமர் திரைப்படத்திற்கு பின் குறிப்பிடும் வகையில் திரை வாய்ப்பு கிடைக்காத சுனைனா, வெப் சீரிஸ்களின் பக்கம் தனது கவனத்தை செலுத்தினார். இதில் இன்ஸ்பெக்டர் ரிஷி, Meet Cute போன்றவை இவரது நடிப்பு சான்றாக அமைந்த தொடர்கள் ஆகும்!

Image Source: x-com/thesunainaa

Thanks For Reading!

Next: அரியவகை நோய் பாதிப்பு.. நடிகை 'மம்தா மோகன்தாஸ்' பற்றிய சில முக்கிய தகவல்கள்!

[ad_2]