Jul 29, 2024
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 போட்டிகளில் - 10மீ துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை மனு பாக்கர் (Manu Bhaker) பற்றி பலரும் அறியாத சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்!
Image Source: instagram-com/bhakermanu
ஹரியானவின் சச்சார் மாவட்டத்தில் பிறந்த மனு துப்பாக்கி சுடுதலில் மட்டும் தேர்ந்தவர் அல்ல. பள்ளி காலத்தில் குத்துச்சண்டை, டென்னிஸ், வில் வித்தை, ஸ்கேட்டிங் போன்ற போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பல குவித்தவர்!
Image Source: instagram-com/bhakermanu
மனிப்பூர் மாநிலத்தின் பிரபல தங்-டா (thang ta) எனும் தற்காப்பு கலையில் பயிற்சி பெற்ற மனு பாக்கர், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கெடுத்து பதக்கம் வென்றுள்ளார்.
Image Source: instagram-com/bhakermanu
தனது 14-வது வயதில் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ஆர்வத்தை வெளிப்படுதிய மனு பார்கர், 2017-ஆம் ஆண்டு Asian Junior Championships போட்டியில் பங்கெடுத்து வெள்ளி பதக்கம் வென்றார்.
Image Source: instagram-com/bhakermanu
இதே 2017-ஆம் ஆண்டு கேரளாவில் நடைப்பெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கெடுத்த மனு பார்கர், மொத்தமாக 9 பதக்கங்களை வென்று தலைப்பு செய்தியில் இடம் பிடித்தார்.
Image Source: instagram-com/bhakermanu
2017-ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேசிய அளவிலான போட்டிகளின் இறுதி போட்டியில் - உலக தர வரிசையில் முதல் இடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை ஹீனா சித்துவின் 240.8 புள்ளி சாதனையை, மனு 242.3 புள்ளிகளுடன் முறியடிதார்!
Image Source: instagram-com/bhakermanu
பன்னாட்டு துப்பாக்கி சுடும் விளையாட்டு கூட்டமைப்பு (ISSF) சார்பில் நடத்தப்பட்ட உலக கோப்பை போட்டிகளில் மனு, மொத்தம் 9 தக்கம் (2019-21), 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.
Image Source: instagram-com/bhakermanu
2018-ஆம் ஆண்டு நடைப்பெற்ற காமன்வெல்த் போட்டிகளில் இறுதி போட்டிக்கான தகுதி சுற்றில் 400-க்கு 388 புள்ளிகளை குவித்த மனு, இறுதிப் போட்டியில் வென்று தங்கப் பத்கத்தை வென்றார்!
Image Source: instagram-com/bhakermanu
துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் பதக்கங்கள் பல வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த மனு பார்கரை கௌரவிக்கும் வகையில் 2020-ஆம் ஆண்டு அவருக்கு அர்சுனா விருது அளிக்கப்பட்டது. அப்போது அவர் வயது 18!
Image Source: instagram-com/bhakermanu
Thanks For Reading!