Jun 26, 2024
Wazhma Ayoubi ஒரு சமூக ஊடக பிரபலம். இன்ஸ்டா ரீல்ஸ்கள் மூலம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்த இவர், சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியில் தோன்றி, இந்தியர்களின் கவனத்தை ஈர்த்தவர்.
Image Source: x-com/wazhmaayoubi
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியில் அடிக்கடி தோன்றி, இந்தியர்களின் கவனத்தை ஈர்த்த இவர் உண்மையில் ஆப்கான் நாட்டை சேர்ந்தவர். அதாவது ஆப்கானிஸ்தான் நாட்டை பூர்வீகமாக கொண்டவர்.
Image Source: x-com/wazhmaayoubi
ஆப்கானிஸ்தான் நாட்டில் பிறந்த Wazhma Ayoubi; வளர்ந்ததெல்லாம் USA நாட்டில். பின்னர் UAE-க்கு இடம்பெயர்ந்த இவர், தனது குடும்பத்தாருடன் இங்கு வசித்து வருகிறார்.
Image Source: x-com/wazhmaayoubi
2022-ஆம் ஆண்டு நடைப்பெற்ற Asia Cup தொடரின் போது தான் Wazhma Ayoubi பிரபலமாக துவங்கினார். இத்தொடரின் போது ஸ்டேடியத்தில் ரசிகையாக தோன்றி, உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
Image Source: x-com/wazhmaayoubi
Wazhma Ayoubi ஆப்கான் நாட்டை சேர்ந்தவராக இருப்பினும், இந்திய கிரிக்கெட் அணியின் மீது தனி பிரியம் கொண்டவர். இதன் காரணமாக, அவ்வப்போது ஆடுகளத்தில் இந்திய கிரிக்கெட் ஜெர்ஸியில் தோன்றி, தனது ஆதரவை தெரிவிப்பது உண்டு!
Image Source: x-com/wazhmaayoubi
இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலி தான் இவருக்கு பிடித்த வீரர். 2023-ஆம் ஆண்டு ODI உலக கோப்பை போட்டிகளின் போது விராட் கோலியை சந்தித்து தனது ஆதரவை இவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது!
Image Source: x-com/wazhmaayoubi
கிரிக்கெட் போட்டிகளில் இவர் இந்தியாவிற்கு ஆதரவு தெரிப்பினும், ஆப்கான் vs இந்தியா எனும் வரும்போது இவர், ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு தனது ஆதரவை வெளிப்படுத்துகிறார்.
Image Source: x-com/wazhmaayoubi
கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரையில் தற்போதைய ஆப்கான் கேப்டன் ரஷீத் கானை தான் இவருக்கு அதிகம் பிடிக்குமாம்.
Image Source: x-com
டி20 உலக கோப்பை தொடரின் சமீபத்திய போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், ஆப்கானுக்கு ஆதரவு தெரிவித்த இந்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் Wazhma Ayoubi!
Image Source: x-com/wazhmaayoubi
Thanks For Reading!