[ad_1] ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் நண்டு

Jul 29, 2024

ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் நண்டு

Nivetha

கடல் உணவுகள்

தற்போதைய அவசர உலகத்தில் உணவு முறை மாற்றம் காரணமாக பலவித புதுப்புது பிரச்சனைகள் ஏற்பட துவங்கியுள்ளது. இதன் காரணமாக ஆரோக்கியமான உணவுகளின் தேடுதல் அனைவரது மத்தியிலும் அதிகரித்து காணப்படுகிறது. அப்படி இருக்கையில், உடல் ஆரோக்கியத்தை பேணும் கடல் உணவான நண்டுகள் குறித்த தகவல்கள் அடங்கிய பதிவு இது.

Image Source: istock

சத்துக்கள்

கடல் மீன்கள் பலவகை இருந்தாலும் ஒவ்வொரு வகை மீன்களிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் இருக்க தான் செய்கிறது. அதனால் தான் மற்ற இறைச்சிகளை விட மீன் வகைகள் சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

Image Source: istock

நண்டுகள்

கடல் உணவான நண்டு ஈரப்புள்ளி நண்டு, களி நண்டு, சிலுவை நண்டு, முக்கண் நண்டு போன்ற பல பெயர்களில் அறியப்படுகிறது. கடலில் மட்டும் நண்டுகள் கிடைப்பதில்லை. ஏரி, குளம், சதுப்பு நிலப்பகுதிகள், குட்டைகள், ஆறு போன்ற நீர்நிலைகளிலும் நண்டுகள் வாழுகிறது.

Image Source: pixabay

கொழுப்பு சத்து

நண்டுகளில் ஒமேகா 3, ப்ரோட்டின், கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் ஏ, பி12 உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இதில் நல்ல கொழுப்பு சத்து மற்றும் குறைந்த கலோரிகள் இருப்பதால் உடல் பருமனடையும் பிரச்சனை ஏற்படாது.

Image Source: pixabay

ரத்த சர்க்கரை அளவு

நண்டுகளில் குரோமியம் சத்து அமைந்துள்ளது, இது ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது. அதே போல் ரத்தத்தின் இன்சுலின் அளவும் நண்டுகளின் குரோமிய சத்தால் குறைகிறதாம். அதனால் இதனை சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சாப்பிடலாம்.

Image Source: pixabay

முகப்பருக்கள்

நண்டுகளில் இருக்கும் ஜின்க் நமது முகத்தில் ஏற்படும் பருக்களை வரவிடாமல் தடுக்கிறது, அதுமட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் எண்ணெய் பசையையும் நீக்க உதவுகிறது. எலும்புகளின் வளர்ச்சி சீராக இருப்பதோடு, எலும்புகளுக்கு நல்ல வலுவையும் நண்டுகள் கொடுக்கிறது.

Image Source: istock

முடி ஆரோக்கியம்

நண்டுகளில் ப்ரோட்டீன்கள் நிறைந்துள்ளது, இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளும் பட்சத்தில் இந்த ப்ரோட்டீன் முடி ஆரோக்கியத்தையும், சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. அதுமட்டுமின்றி தசைகள் சீரமைப்பிற்கும் இது உதவுகிறது.

Image Source: istock

மாரடைப்பு

நண்டுகளில் இருக்கும் குறைந்த கொழுப்பு சத்து இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதோடு, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும். அதனால் இருதயம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் நண்டினை அடிக்கடி அவர்களது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

Image Source: istock

நண்டு சூப்

பெரும்பாலானோர் நண்டுகளை சூப் வடிவில் உட்கொள்வார்கள். இது சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை தீர்க்க பயன்படுகிறது. பக்கவாதம், மூளை வளர்ச்சி, நரம்பு மண்டலங்கள் சீராக செயல்பட, எலும்பு தேய்மானம், முடக்குவாதம், சுவாசக்கோளாறு, கண்பார்வை குறைபாட்டினை குணப்படுத்த என பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக இருக்கிறது.

Image Source: Samayam Tamil

Thanks For Reading!

Next: நரம்பு வலுவடைய இந்த உணவுகள் கட்டாயம் தேவை

[ad_2]