[ad_1] ராஜஸ்தானின் அடையாள சின்னம் ஆம்பர் கோட்டை பற்றிய சில சுவாரசிய தகவல்கள்!

May 27, 2024

ராஜஸ்தானின் அடையாள சின்னம் ஆம்பர் கோட்டை பற்றிய சில சுவாரசிய தகவல்கள்!

mukesh M

அமர்கோட்டை!

ராஜஸ்தான் மாநிலத்தின் அடையாள சின்னங்களில் ஒன்றாக இருக்கும் இந்த அமர்க்கோட்டை; ஒரு காலத்தில் ராஜபுத்திர மன்னர்களின் இல்லமாக இருந்தது. பார்பவரை வியப்பில் ஆழ்த்தும் இந்த கோட்டை பற்றி பலரும் அறிந்திராத சில சுவாரசிய தகவல்களை இங்கு காணலாம்.

Image Source: pexels-com

கண்ணாடி அரண்மனை!

அமர்க்கோட்டையில் உள்ள மிக அழகான அம்சங்களில் ஒன்று இந்த ஷீஷ் மஹால். இங்கு சிறிய கண்ணாடி ஓடுகள் மற்றும் வண்ணமயமான கண்ணாடிகள் அமைந்துள்ளதால் இது கண்ணாடி அரண்மனை என்று கூறப்படுகிறது.

Image Source: instagram-com

கழுகுகளின் மலை!

இது கழுகுகளின் மலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு சுரங்கப் பாதைகளும் பல ரகசிய பாதைகளும் அமைந்துள்ளது. எதிர் நாட்டு படையெடுப்பின் போது ராணிகள் தப்பிக்கும் பாதையாக இது பயன்படுத்தப்பட்டுள்ளது.

Image Source: instagram-com

மாவோட்டா ஏரி

இங்கு அமைந்துள்ள மாவோட்டா ஏறி மின்னும் தண்ணீரில் அமர்கோட்டையே பிரதிபலிக்கும் கண்ணாடி போல காட்சி அளிக்கிறது. மேலும் இந்த அழகான இடத்தில் குங்குமப்பூ தோட்டம் மிகவும் பிரபலம்.

Image Source: instagram-com

கேசர் கியாரி

இந்த அமர் கோட்டையில் அமைந்துள்ள குங்குமப்பூ தோட்டம் கேசர் கியாரி என்று அழைக்கப்படுகிறது. இந்த குங்குமப்பூ தோட்டத்தில் பகல் மற்றும் இரவிலும் அதன் அழகை நீங்கள் ரசிக்கலாம்.

Image Source: instagram-com

நூறாண்டுகள்

சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கேசர் கியாரி தோட்டம் ஜெய்பூரின் மன்னர்களுக்கு ஒரு சிறந்த இடமாக இருந்தது. அமர்க்கோட்டையை இன்னும் பிரம்மாண்டமாகவும் அழகாகவும் மாற்றுவதற்கு நூறு ஆண்டுகள் ஆகியுள்ளது.

Image Source: instagram-com

குழந்தை பாக்கியம் கிட்டும்!

இந்து தெய்வமான அம்பா மாதாவின் பெயரால் இந்த அமர் கோட்டை அதன் பெயரை பெற்றது. இங்கு வந்து ஆசீர்வாதம் பெறுபவர்களுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்றும் உண்டு.

Image Source: instagram-com

கணேஷ் போல்

அமர் கோட்டையில் அமைந்துள்ள அழகிய அரண்மனைகளுக்குள் மகாராஜாக்கள் நுழைவதற்கான ஒரு முக்கிய நுழைவாயில் தான் இந்த கணேஷ் போல். இதன் மேல் தளத்தில் சிறிய ஜன்னல்களை நீங்கள் பார்க்கலாம்.

Image Source: instagram-com

மறைக்கப்பட்ட பாதை

அமர்க்கோட்டையின் நிலப்பரப்பின் கீழ் இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை ஒன்று உள்ளது. இது அமர்க்கோட்டையில் இருந்து அதன் சகோதரி கோட்டையான ஜெய்கர் கோட்டைக்கு செல்லும் ஒரு ரகசிய சுரங்கப்பாதை.

Image Source: instagram-com

Thanks For Reading!

Next: சைவப் பிரியர்களுக்கு சுற்றுலா செல்ல சிறந்த சர்வதேச இடங்கள் இதோ

[ad_2]