[ad_1] ராஜாஜி தேசிய பூங்காவின் சிறப்புகள் என்ன தெரியுமா?

May 29, 2024

ராஜாஜி தேசிய பூங்காவின் சிறப்புகள் என்ன தெரியுமா?

Anoj

ராஜாஜி தேசிய பூங்கா

இது உத்தரக்காண்டில் அமைந்துள்ள மிகப்பெரிய தேசிய பூங்காவாகும். பல்லுயிர் மற்றும் இயற்கை அழகை பிரதிபலிக்கும் இந்த பூங்காவுக்கு வாழ்வில் ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்பதற்கான காரணங்களை இங்கு பார்க்கலாம்

Image Source: instagram-com/veeru_negi_naturalist

வளமான பல்லுயிர்

ராஜாஜி தேசிய பூங்கா பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் தாயகமாகும். யானை, புலி, சிறுத்தை மற்றும் மான்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கக்கூடும்

Image Source: unsplash-com

யானைகள் ராஜ்ஜியம்

இந்த பூங்காவில் ஆசிய யானைகள் அதிகளவில் காண முடியும். இந்த பிரமாண்ட உயிரினத்தை அதன் வாழ்விடத்திலே கண்டு ரசித்திட இந்தியாவின் சிறந்த இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

Image Source: unsplash-com

பறவைகள் பார்ப்பது.,

கிரேட் ஹார்ன்பில், பைட் கிங்ஃபிஷர் மற்றும் பல்வேறு வகையான மரங்கொத்திகள் மற்றும் கிளிகளை ராஜாஜி தேசிய பூங்காவில் காண முடியும். இங்கு சுமார் 315க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இருப்பதாக கூறப்படுகிறது

Image Source: unsplash-com

இயற்கை அழகு

ஷிவாலிக் மலைத்தொடர் மற்றும் இந்தோ-கங்கை சமவெளிகளுக்கு இடையில் அமைந்துள்ள இந்த பூங்கா, பிரமிப்பூட்டும் நிலப்பரப்பை கொண்டுள்ளது. பசுமையான காடுகள், வளைந்து செல்லும் ஆறுகள் மற்றும் மலைகளின் பரந்த காட்சிகள் இயற்கை ஆர்வலர்களுக்கு சிறந்த உணர்வை தருகிறது

Image Source: instagram-com/ridhimapandeyy

புலிகள் காப்பகம்

இந்த பூங்கா, ராஜாஜி புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியாகும். புலிகளின் வாழ்விடங்களை ஆராய விரும்புவோருக்கு இது ஏற்ற இடமாகும். அழிந்து வரும் புலி எண்ணிக்கையை மிகவும் பாதுகாப்பாக பராமரித்து வருகின்றனர்

Image Source: pexels-com

சஃபாரி ரைடு

இந்த பூங்கா ஜீப் சஃபாரி மற்றும் யானை சவாரிகளை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. இது வனப்பகுதியை ஆராய்வதற்கான சரியான இடமாகும். இந்த சஃபாரி அனுபவம் வாய்ந்த இயற்கை ஆர்வலர்களின் மேற்பார்வையில் நிகழ்கிறது

Image Source: istock

எளிதாக செல்லலாம்

டேராடூன், ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் போன்ற நகரங்களுக்கு அருகில் அமைந்துள்ள ராஜாஜி தேசிய பூங்காவிற்கு சாலை, ரயில் மற்றும் விமானம் மூலம் எளிதில் சென்றுவிடலாம். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வர செய்வார்கள்

Image Source: instagram-com/varunchopra17

சிறந்த நேரம் எது?

இங்கு பூங்கா காலையில் 6 மணி முதல் 9 மணி வரையும், மாலையில் 3 மணி முதல் 6 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். அதேபோல், மழைக்காலத்தில் மக்களுக்கு அனுமதி கிடையாது. அதாவது ஜூன் 15 முதல் நவம்பர் 15 வரை மூடப்பட்டிருக்கும்.

Image Source: instagram-com/gaurav-chand

Thanks For Reading!

Next: வண்டலூர் உயிரியல் பூங்கா தொடர்பான சில சுவாரஸ்ய தகவல்கள்!

[ad_2]