[ad_1] ராயன் பட நடிகை 'துஷாரா விஜயன்' பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

ராயன் பட நடிகை 'துஷாரா விஜயன்' பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

Anoj, Samayam Tamil

Jul 26, 2024

துஷாரா விஜயன்

துஷாரா விஜயன்

தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை துஷாரா விஜயன் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்க்கலாம்

Image Source: instagram-com/dushara_vijayan

பிறப்பு - கல்லூரி விவரம்

துஷாரா விஜயன், தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். ஆரம்பத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்த துஷாரா, அதனை பாதியில் நிறுத்திவிட்டு ஃபேஷன் படிப்பில் இணைந்தார்.

Image Source: instagram-com/dushara_vijayan

மாடலிங் ஆர்வம்

ஃபேஷன் படிப்பில் சேர்ந்த துஷாராவுக்கு மாடலிங்கிலும் ஆர்வம் அதிகரித்துள்ளது. ஏராளமான தொலைக்காட்சி விளம்பரங்களில் மாடலாக பணியாற்றியுள்ளார். அதேபோல், பல முன்னணி பிராண்டுகளின் ராம்ப் வாக்கில் பங்கேற்றுள்ளார்

Image Source: instagram-com/dushara_vijayan

மிஸ் சென்னை பட்டம்

2017ல் 'மிஸ் சென்னை' பட்டத்தை வென்ற துஷாரா விஜயன், அதே ஆண்டில் 'மிஸ் சவுத் இந்தியா' போட்டியில் இரண்டாவது ரன்னர் அப்-ஆக வந்தார்

Image Source: instagram-com/dushara_vijayan

திரைப்பட அறிமுகம்

2019ல் வெளியான 'போதை ஏறி புத்தி மாறி' படம் மூலம் கோலிவுட்டில் கால்பதித்தார் துஷாரா விஜயன். படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், துஷாரா நடிப்பு திரைத்துறையால் கவனிக்கப்பட்டது

Image Source: instagram-com/dushara_vijayan

சார்பட்டா பரம்பரை

பா ரஞ்சித், ட்விட்டரில் துஷாராவின் புகைப்படத்தை பார்த்து ஆடிஷனுக்கு அழைத்துள்ளார். ஆரம்பத்தில் சிறிது தயக்கம் இருந்தாலும், அவரை நடிக்க வைக்க முடிவு செய்தார். இப்படத்திற்காக வட சென்னை பேச்சு வழக்கம் மற்றும் பாடி லாங்குவேஜ் துஷாரா கற்றுள்ளார்

Image Source: instagram-com/dushara_vijayan

விருதுகள்

சார்பட்டா பரம்பரை மற்றும் நட்சத்திரம் நகர்கிறது படத்திற்காக JFW விருது, கலாட்டா கிரவுன் விருது, தமிழ் நட்சத்திரம் விருது மற்றும் OTTplay விருதுகளை துஷாரா விஜயன் பெற்றுள்ளார்

Image Source: instagram-com/dushara_vijayan

35 வயதில் ரிட்டையர்டு

35 வயது ஆனதும் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துவிட்டு, உலக நாடுகளை சுற்றி பார்க்க திட்டமிட்டிருப்பதாக துஷாரா பேட்டி ஒன்றில் கூறினார். அனைத்து நாடுகளையும் பார்க்க ஆசை இருப்பதாக தெரிவித்தார்

Image Source: instagram-com/dushara_vijayan

ஃபிட்னஸ் ஃப்ரீக்

உடலை ஃபிட்டாக வைப்பதில் அதிக ஆர்வமிக்கவர். அவரது இன்ஸ்டா பக்கத்தில், ஜிம்மில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோஸ் பகிர செய்வார். லாக்டவுன் காலத்தில் தான் உடற்பயிற்சி மற்றும் யோகாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தாக கூறினார்

Image Source: instagram-com/dushara_vijayan

Thanks For Reading!

Next: இந்திய விமானப்படை தொடர்பாக சில திரைப்படங்கள் இதோ!

[ad_2]