Jul 8, 2024
BY: mukesh M, Samayam Tamilஆந்திரா மாநிலம் ராயலசீமா பகுதியில் பரவலாக கிடைக்கும் ‘பாலகுரா உள்ளி காரத்தை’ நம் வீட்டிலேயே மிகவும் எளிய முறையில் தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!
Image Source: instagram-com
வெங்காயம் - 2 | பூண்டு பல் - 20 பல் | உப்பு - 1 ஸ்பூன் | மிளகாய் பொடி - 2 ஸ்பூன் | எண்ணெய் - 2 ஸ்பூன் | பசலை கீரை - 1 கட்டு
Image Source: istock
கடுகு - 1 ஸ்பூன் | சீரகம் - 1 ஸ்பூன் | கடலை பருப்பு - 1 ஸ்பூன் | உளுந்து - 1 ஸ்பூன் | கறிவேப்பிலை - 1 கொத்து | மஞ்சள் - 1/2 ஸ்பூன்
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட பசலை கீரையை நன்கு ஆய்ந்து சுத்தம் செய்து பின் பொடியாக நறுக்கி தனியே தயாராக எடுத்து வைக்கவும்.
Image Source: pexels-com
தொடர்ந்து எடுத்துக்கொண்ட வெங்காயம், பூண்டு பல் ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மிக்ஸி ஜார் ஒன்றுக்கு மாற்றவும்.
Image Source: istock
பின் இதனுடன் உப்பு, மிளகாய் பொடி சேர்த்து நன்கு விழுதாக அரைத்து தனியே தயாராக எடுத்து வைக்கவும்.
Image Source: istock
தற்போது பாலகுரா தயார் செய்ய கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் கடுகு, கடலை பருப்பு, கறிவேப்பிலை, சீரகம், உளுந்து சேர்த்து தாளிக்கவும்.
Image Source: istock
பின் இதனுடன் மிக்ஸியில் அரைத்த சேர்மம் மற்றும் மஞ்சள், தேவைப்பட்டால் உப்பு சேர்த்து நன்கு 4 - 7 நிமிடங்களுக்கு வதக்கவும்.
Image Source: istock
தற்போது தயாராக நறுக்கி வைத்த பசலை கீரையை சேர்த்து கிளறி 10 நிமிடங்கள் வரை வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்க சுவையான பாலகுரா உள்ளி காரம் ரெடி!
Image Source: istock
Thanks For Reading!