[ad_1] ருசியான 'நெல்லிக்காய் தயிர் பச்சடி' செய்முறை

Jul 26, 2024

BY: Anoj, Samayam Tamil

ருசியான 'நெல்லிக்காய் தயிர் பச்சடி' செய்முறை

நெல்லிக்காய் தயிர் பச்சடி

மருத்துவ குணங்கள் நிறைந்த நெல்லிக்காயை பயன்படுத்தி எப்படி சுவையான தயிர் பச்சடி செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம்

Image Source: istock

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் - 2; பச்சை மிளகாய் - 1; இஞ்சி - 1 இன்ச்; கறிவேப்பிலை - 10; தேங்காய் துருவல் - அரை கப்; தயிர் - 1 கப்; உப்பு - சுவைக்கேற்ப

Image Source: istock

தாளிப்பதற்கு

கடுகு - 1 டீஸ்பூன்; உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்; பெருங்காயப் பொடி - அரை டீஸ்பூன்; வர மிளகாய் - 2; கறிவேப்பிலை - சிறிதளவு; எண்ணெய் - தேவையான அளவு

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் நெல்லிக்காயை நன்றாக வாஷ் செய்துவிட்டு, அதன் கொட்டையை நீக்கிவிட வேண்டும். பிறகு, பிளெண்டருக்கு மாற்றி லேசாக அரைத்துகொள்ளவும்

Image Source: istock

செய்முறை படி - 2

அடுத்து, ப.மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல், உப்பு மற்றும் அரை கப் தயிரை சேர்த்து நன்கு அரைத்துகொள்ளவும்

Image Source: pexels-com

செய்முறை படி - 3

இந்த கலவையை ஒரு பவுலுக்கு மாற்றிவிட்டு, மீதமுள்ள தயிரை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்

Image Source: istock

செய்முறை படி - 4

இப்போது அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். அதில், கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்க்க வேண்டும்

Image Source: istock

செய்முறை படி - 5

அடுத்து, பெருங்காய பொடி, வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக தாளிக்கவும்

Image Source: pexels-com

சுவையான பச்சடி ரெடி

இறுதியாக, தாளித்ததை நெல்லிக்காய் - தயிர் கொட்டினால் சுவையான பச்சடி ரெடியாகிவிடும். இதனை சாப்பிட்டு வந்தால் உடலில் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கக்கூடும்

Image Source: istock

Thanks For Reading!

Next: ஊட்டச்சத்து நிறைந்த 'ராகி மோமோஸ்' செய்முறை

[ad_2]