Jun 4, 2024
ஊட்டங்கள் பல நிறைந்து காணப்படும் வெள்ளரிக்காய் பயன்படுத்தி சுவையான தோசை ஒன்றினை தயார் செய்வது எப்படி என இங்கு நாம் காணலாம்!
Image Source: istock
வெள்ளரிக்காய் - | இட்லி அரிசி - 3 கப் | தேங்காய் - 1 மூடி | பச்சை மிளகாய் - 2 | இஞ்சி - 2" அளவு | உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட அரிசியை நன்கு அலசி சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் மூழ்கும் அளவு தண்ணீருடன் சேர்த்து 2 மணி நேரங்கள் வரை நன்கு ஊற வைக்கவும்.
Image Source: pexels-com
இதனிடையே எடுத்துக்கொண்ட வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
Image Source: istock
பின் மிக்ஸர் ஜார் ஒன்றில் இந்த சேர்மங்களை சேர்த்து நன்கு ஒரு முறை அரைத்துக்கொள்ளவும்.
Image Source: istock
தொடர்ந்து இதே மிக்ஸி ஜாரில் அரிசியை வடிகட்டி சேர்த்து நன்கு விழுதாக அரைத்து - வெள்ளரிக்காய் விழுது உள்ள பாத்திரத்தில் சேர்த்து நன்கு கரைந்துக்கொள்ளவும்.
Image Source: istock
தொடர்ந்து எடுத்துக்கொண்ட தேங்காயினை துருவி, மாவுடன் சேர்த்து கரைக்கவும். தொடர்ந்து இதனுடன் உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ள தோசை மாவு ரெடி!
Image Source: istock
தற்போது தோசை சுட்டு எடுக்க தோசை தவாவினை அடுப்பில் வைத்து சூடேற்றி - எண்ணெய் தடவி தயார் செய்துக்கொள்ளவும்.
Image Source: istock
தற்போது தயாராக உள்ள தோசை தவாவில் இந்த மாவினை சேர்த்து பதாமாக சுட்டு எடுக்க சுவையான வெள்ளரிக்காய் தோசை ரெடி!
Image Source: istock
Thanks For Reading!