Jul 16, 2024
BY: mukesh M, Samayam Tamilபன்னீர் விரும்பிகளுக்கு பிடித்த சுவையான பாதாமி பன்னீர் கிரேவியை மிகவும் எளிமையான முறையில் நம் வீட்டிலேயே தயார் செய்வது எப்படி என இங்கு நாம் காணலாம்!
Image Source: istock
வெங்காயம் - 2 | பச்சை மிளகாய் - 3 | கிராம்பு - 3 | பட்டை துண்டு - 2 | ஏலக்காய் - 3 | பன்னீர் - 100கி | மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
Image Source: istock
பே இலை - 2 | சீரகம் - 1 ஸ்பூன் | இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் | பாதாம் - 1 கப் | உப்பு, எண்ணெய் - தேவையான அளவு | கொத்தமல்லி - 1 கொத்து
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட பாதாம் பருப்பை ஒரு பாத்திரத்தில் வெந்நீருடன் சேர்த்து 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்!
Image Source: istock
இதனிடையே குக்கர் ஒன்றை எடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கிராம்பு, பட்டை, ஏலக்காய், உப்பு மற்றும் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து 3 விசில் வர வேக வைத்து இறக்கி - விசில் அடங்க காத்திருக்கவும்.
Image Source: istock
பின் கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் பன்னீர் துண்டுகள், மிளகாய் பொடி சேர்த்து வறுத்துக்கொள்ளவும். பின் இதனுடன் சிறிதளவு வெந்நீர் சேர்த்து கலந்து தனியே எடுத்து வைக்கவும்!
Image Source: pexels-com
தற்போது குக்கரில் வேக வைத்த சேர்மங்களை மிக்ஸி ஜார் ஒன்றில் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து எடுக்கவும். தொடர்ந்து ஊற வைத்த பாதாமையும் இதே மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
Image Source: istock
தற்போது கிரேவி தயார் செய்ய பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் பே இலை, சீரகம் சேர்த்து தாளிக்கவும். தொடர்ந்து அரைத்து எடுத்த மசாலா சேர்மங்களை சேர்த்து 5 - 7 நிமிடங்களுக்கு வதக்கவும்.
Image Source: istock
தொடர்ந்து இதனுடன் பன்னீர் சேர்த்து 4 நிமிடங்கள் வரை வதக்கி பின் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். இறுதியாக கொத்தமல்லி தழைகளை சேர்த்து இறக்கிவிட சுவையான பாதாமி பன்னீர் கிரேவி ரெடி!
Image Source: istock
Thanks For Reading!