[ad_1] ரொட்டி பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா ?

Jul 5, 2024

ரொட்டி பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா ?

Nivetha

ரொட்டி பழம்

ரொட்டி பழம் பார்க்க பலாப்பழம் போல் தான் இருக்கும். பச்சையாக காணப்படும் இது பழுத்த பிறகு மஞ்சள் நிறமாக மாறிவிடும். இதன் சதை பகுதி க்ரீம் போல், மாவுசத்து நிறைந்திருக்கும். புளிப்பான வாழைப்பழம் போன்ற சுவை கொண்ட இப்பழத்தை பச்சையாகவும் சாப்பிடலாம், சமைத்தும் சாப்பிடலாம்.

Image Source: istock

இதய துடிப்பு

ரொட்டி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கிறது. நீரிழிவு நோய் மற்றும் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதோடு, ரத்த அழுத்தம், இதய துடிப்பு உள்ளிட்டவைகளையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது.

Image Source: istock

நார்சத்து

இப்பழத்தில் அதிகளவு நார்சத்து உள்ளதால் குடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, குடல் இயக்கங்களை சீர்படுத்துகிறது. அஜீரணம், அமிலத்தன்மை, அல்சர், நெஞ்செரிச்சல், இரைப்பை அழற்சி உள்ளிட்ட பிரச்சனைகளையும் இது சரி செய்கிறது.

Image Source: istock

புற்றுநோய்

இப்பழம் புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனங்கள் உடலில் உற்பத்தியாவதை தடுப்பதோடு, பெருங்குடலின் சளி சவ்வையும் பாதுகாக்கிறது.

Image Source: istock

சரும ஆரோக்கியம்

ரொட்டி பழத்திலுள்ள வைட்டமின் சி, கொலாஜன் உற்பத்தியினை அதிகரித்து சருமத்தினை அழகாக வைப்பதுடன், புதிய சரும செல்களை வளர்ச்சியடைய செய்கிறது. தோலில் ஏற்படும் தடிப்புகள், அழற்சி மற்றும் தொற்று நோய்களின் அபாயத்தினை குறைக்கிறது.

Image Source: istock

பார்வை திறன்

ரொட்டி பழத்தில் நிறைந்துள்ள வைட்டமின் ஏ கண்களின் பார்வை திறனை பாதுகாப்பதோடு, மேம்படுத்தவும் உதவும்.

Image Source: istock

எலும்புகள்

இப்பழத்தில் அமைந்துள்ள கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் உள்ளிட்டவை உடலிலுள்ள எலும்புகளை வலுவாக மற்றும் ஆரோக்கியமான முறையில் பராமரிக்கிறது. எலும்புகளின் அடர்த்திக்கும் துணையாக இருக்கிறது.

Image Source: istock

சுறுசுறுப்பு

ரொட்டி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் அதிலுள்ள நல்ல கார்போஹைட்ரேட்கள் உடலுக்கு நல்ல ஆற்றலை வழங்கி நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

Image Source: istock

​இளமையான தோற்றம்

ரொட்டி பழத்தில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்நிலையில் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இளமையான தோற்றம் மற்றும் பளபளப்பான சருமம் கிடைக்கும்.

Image Source: Samayam Tamil

Thanks For Reading!

Next: முட்டையின் வெள்ளை கரு நல்லதா ? இல்லை மஞ்சள் கரு நல்லதா ?

[ad_2]