[ad_1] ரோகித் ஷர்மாவுக்கு பிடித்த ‘அவித்த முட்டை புர்ஜி’ செய்முறை!

Aug 2, 2024

ரோகித் ஷர்மாவுக்கு பிடித்த ‘அவித்த முட்டை புர்ஜி’ செய்முறை!

mukesh M

அவித்த முட்டை புர்ஜி!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் ரோகித் ஷர்மாவுக்கு பிடித்த அவித்த முட்டை புர்ஜியை நம் வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!

Image Source: istock

தேவையான பொருட்கள்!

முட்டை - 3 | கடுகு - 1 ஸ்பூன் | பச்சை மிளகாய் - 3 | வெங்காயம் - 1 | தக்காளி - 1 | உப்பு - 1 ஸ்பூன்

Image Source: istock

தேவையான பொருட்கள்!

எண்ணெய் - 2 ஸ்பூன் | மிளகாய் பொடி - 1 ஸ்பூன் | மஞ்சள் - 1 ஸ்பூன் | கரம் மசாலா - 1 ஸ்பூன் | கொத்தமல்லி - 1 கொத்து

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் எடுத்துக்கொண்ட முட்டைகளை ஒரு பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீருடன் சேர்த்து பதமாக அவித்து எடுத்துக்கொள்ளவும்.

Image Source: pexels-com

செய்முறை படி - 2

இதனிடையே எடுத்துக்கொண்ட தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கி தனித்தனியே தயாராக எடுத்து வைக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 3

தற்போது புர்ஜி தயார் செய்ய கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் கடுகு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 4

பின் இதனுடன் தக்காளி, மஞ்சள், மிளகாய் பொடி, உப்பு, கரம் மசாலா ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வதக்கவும். அதேநேரம், அவித்த முட்டைகளை ஓடு நீக்கி பின் சிறு துண்டாக நறுக்கிக்கொள்ளவும்.

Image Source: istock

செய்முறை படி - 5

கடாயில் உள்ள சேர்மத்தின் மசாலா வாசம் நீங்கும் நிலையில் இதில் துண்டாக நறுக்கிய முட்டை சேர்த்து 4 - 6 நிமிடங்களுக்கு (மிதமான சூட்டில்) வதக்கிக்கொள்ளவும்.

Image Source: istock

அவித்த முட்டை புர்ஜி ரெடி!

இறுதியாக இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளை சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான அவித்த முட்டை புர்ஜி ரெடி!

Image Source: istock

Thanks For Reading!

Next: அதிதி ராவ் விரும்பி சாப்பிடும் 'ஆம்லெட் சட்னி' செய்முறை

[ad_2]