[ad_1] ரோட்டுக்கடை காளானை வீட்டிலேயே செய்வது எப்படி?

May 25, 2024

BY: Anoj

ரோட்டுக்கடை காளானை வீட்டிலேயே செய்வது எப்படி?

காளான் செய்முறை

ரோட்டுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் காளான் அனைவருக்கும் ஃபேவரைட் டிஷ்ஷாகும். அதன் சுவை அட்டகாசமாக இருக்கும். அதனை வீட்டிலேயே எப்படி எளிதாக சமைத்து சாப்பிடலாம் என்பதை இங்கு பார்க்கலாம்

Image Source: instagram-com/spicy_hand

தேவையான பொருட்கள்

முட்டைக்கோஸ் - 2 கப்; சோள மாவு - கால் கப்; மைதா - 1 கப்; மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்; காளான் - 2 கப்; எண்ணெய் - தேவையான அளவு; வெங்காயம் - 3; இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

Image Source: istock

தேவையான பொருட்கள்

தக்காளி - 2; மஞ்சள் - 1 டீஸ்பூன்; ப.மிளகாய் - 2; கறிவேப்பிலை - சிறிதளவு; தனியா தூள் - 1 டீஸ்பூன்; உப்பு - தேவைக்கேற்ப; கரம் மசாலா - 2 டீஸ்பூன்; சோள மாவு - 1 டீஸ்பூன்

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் காளான், முட்டைக்கோஸ் ஆகிய இரண்டையும் பொடியாக நறுக்கி பவுலுக்கு மாற்ற வேண்டும்

Image Source: pexels-com

செய்முறை படி - 2

அத்துடன் மைதா, கால் கப் சோள மாவு, 1 டீஸ்பூன் மிளகாய் தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து 5 நிமிடங்கள் ஊறவைக்கவும்

Image Source: istock

செய்முறை படி - 3

பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊறவைத்த காளானை பக்கோடா போல் வறுத்தெடுத்து தனியாக வைத்துவிடவும்

Image Source: instagram-com/kannammacooks

செய்முறை படி - 4

மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை, மஞ்சள், 1 டீஸ்பூன் மிளகாய் தூள், கரம் மசாலா, தனியா தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்

Image Source: istock

செய்முறை படி - 5

அடுத்து, தக்காளியை மைய பேஸ்டாக அரைத்து சேர்க்க வேண்டும். அத்துடன் 1 டீஸ்பூன் சோள மாவை நீரில் கலந்து கலவையில் சேர்க்க வேண்டும். மசாலா கலவைய நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும்

Image Source: istock

காளான் ரெடி

இறுதியாக, வறுத்து வைத்துள்ள காளானை இந்த மசாலாவில் உடைத்து போட்டு பிரட்டி எடுத்தால் சுவையான ரோட்டுக்கடை காளான் ரெடி. அதன் மீது நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை தூவி பரிமாற செய்யலாம்

Image Source: instagram-com/kannammacooks

Thanks For Reading!

Next: 10 நிமிடத்தில் அரிசி மாவில் 'வடை' செய்வது எப்படி?

[ad_2]