[ad_1] வகை-1 நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்!

May 15, 2024

வகை-1 நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்!

mukesh M

வகை-1 நீரிழிவை நிர்வகிக்கும் முறைகள்!

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பராமரிப்பதன் மூலம் வகை 1 நீரிழிவு நோயை நிர்வகிக்க முடியும். இதற்கு சில சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அது குறித்த தகவல்களை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

Image Source: istock

இரத்தத்தில் சர்க்கரை அளவை கண்காணித்தல்

உடற்பயிற்சி செய்த பிறகு, உணவு, மருந்துகள் போன்றவற்றை உட்கொண்ட பிறகு உங்களது உடலானது ஆரோக்கியமாக இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள உங்கள் மருத்துவர் கூறியபடி தவறாமல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கண்காணித்து வாருங்கள்.

Image Source: istock

உணவு பழக்க வழக்கம்!

தினசரி உங்கள் உணவுகளில் பழங்கள், காய்கறிகள், நல்ல கொழுப்புகள் மிதமான புரதச்சத்து நிறைந்த உணவுகள் என ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களுக்கு உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சம நிலையில் வைத்திருக்க உதவும்.

Image Source: istock

உடற்பயிற்சி!

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும், உடல் எடையை பராமரிக்கவும், இன்சுலின் உடலில் நன்றாக உறிஞ்சப்படவும் குறைந்தது நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம். வாரம் முழுவதும் கணிசமான நேரத்தை உடற்பயிற்சிக்கு செலவிடுங்கள்.

Image Source: istock

இன்சுலின் அளவை கண்காணித்தல்!

மருத்துவரின் ஆலோசனைப்படி இன்சுலினை செலுத்திக் கொள்ளுங்கள். உங்களது உடல் செயல்பாடு, உணவு பழக்க வழக்கங்கள், மன அழுத்தம் போன்றவற்றை கவனத்தில் கொண்டு இன்சுலினின் அளவை தொடர்ந்து கண்காணித்து வரவும்.

Image Source: istock

நீர் ஆகாரம் எடுத்துக்கொள்ளுங்கள்!

வகை 1 நீரிழிவு நோயாளிகளுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே போதுமான அளவு நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

Image Source: istock

கீட்டோன் அளவை கண்காணித்தல்!

உங்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டாலோ அல்லது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தாலோ, சிறுநீரில் கீட்டோன் அளவை கண்காணிக்கவும். கீட்டோனின் அளவு அதிகமாக இருந்தால் அது இன்சுலின் பற்றாக்குறையை குறிக்கிறது.

Image Source: istock

மன அழுத்தம்!

மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை நிர்வகிக்க சுவாசப் பயிற்சி, யோகா அல்லது உங்களை லேசாக உணர வைக்கும் காரியங்களில் உங்கள் உடலையும் மனதையும் செலுத்துங்கள். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்திருக்க உங்களுக்கு உதவும்.

Image Source: pexels-com

தூக்கமின்மை!

தூக்கமின்மை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். நமது உடல் ஆரோக்கியத்திற்கு தூக்கம் மிகவும் முக்கியம். நமது உடலுக்கு தேவையான ஓய்வினை தூக்கத்திலிருந்து தான் பெற முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.

Image Source: istock

Thanks For Reading!

Next: அளவுக்கு அதிகமாக சியா விதை உட்கொள்வதால் வரும் ஆபத்து!

[ad_2]