Jun 14, 2024
குங்குமப் பூவில் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இது முகப்பருக்களை எதிர்த்து போராட உதவுகிறது. இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. முகப்பருக்களுக்கு காரணமான பாக்டீரியாக்களை அழிக்கிறது.
Image Source: pexels-com
100 மி.லி பாதாம் எண்ணெய், 10-15 குங்குமப் பூக்கள், 1 காற்று புகாத டப்பா ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் 100 மி.லி பாதாம் எண்ணெய் சேர்த்து சூடுபடுத்துங்கள். பாதாம் எண்ணெய் ஓரளவுக்கு சூடாக்க வேண்டும்.
Image Source: istock
இப்பொழுது சூடுபடுத்திய எண்ணெயில் 10-15 குங்குமப் பூக்களை சேருங்கள். இந்த எண்ணெயை காற்று புகாத பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள்.
Image Source: istock
ஒரு 7 நாட்களுக்கு அந்த பாட்டில் அப்படியே இருக்கட்டும். சில நாட்கள் கழித்து அந்த எண்ணெய் அப்படியே ஆரஞ்சு நிறத்திற்கு மாறும். பிறகு இதை பயன்படுத்தி உங்கள் சரும நிறத்தை மேலும் கூட்டலாம்.
Image Source: pexels-com
இந்த குங்குமப் பூ எண்ணெய் சரும ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல கூந்தல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. முடி உதிர்தலை தடுக்கிறது. புதிய முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
Image Source: pexels-com
குங்குமப் பூ எண்ணெய் ஸ்கின் டோனராக செயல்படுகிறது. இந்த எண்ணெயை தவறாமல் பயன்படுத்தி வந்தால் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப் புள்ளிகளை போக்குகிறது.
Image Source: istock
சூரியனால் ஏற்படும் கருமையை போக்கி சருமத்தை பொலிவாக்க குங்குமப் பூ எண்ணெய் உதவுகிறது. இதை எடுத்து முகத்தில் மசாஜ் செய்து சில நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.
Image Source: istock
குங்குமப் பூ எண்ணெய் எக்ஸ்ஃபோலியண்ட்டாக செயல்படுகிறது. இது சருமத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும், சருமத்தை நீரேற்றத்தை தக்க வைக்கிறது
Image Source: istock
Thanks For Reading!