வட இந்தியாவுக்கு சுற்றுலா போறீங்களா? அப்போ இதை கட்டாயம் படிங்க!
Anoj
காலநிலை முக்கியம்
இனிமையான சுற்றுலா அனுபவத்திற்கு வானிலை மிகவும் முக்கியம். மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் வறண்ட வட இந்தியா பகுதிகளை ஆராய வேண்டும். ஏனெனில், சம்மரில் அங்கு 45 டிகிரி செல்சியல் மேல் வெப்பம் இருக்கக்கூடும். மலைப்பிரதேசங்களை கோடையில் பார்வையிட செல்லலாம்
Image Source: pexels-com
பாரம்பரிய உணவுகள்
ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவமான சுவை கொண்ட பாரம்பரிய உணவுகள் இருக்கக்கூடும். அவற்றை சுவைத்திட ஒருபோதும் மிஸ் செய்துவிடக்கூடாது. அவை வேறு இடங்களில் கிடைத்தாலும் ஒரிஜினல் டேஸ்ட் கிடைத்திட செய்யாது
Image Source: pexels-com
சுற்றுலா வழிகாட்டி
வட இந்தியாவின் பல்வேறு பகுதிகள் வரலாற்று மற்றும் தனித்துவமான இடங்களைக் கொண்டுள்ளன. அவை பண்டைய பேரரசுகள் பற்றியும், பழங்கால கலாச்சாரம் பற்றியும் விவரிக்க செய்கின்றன. அவற்றை முழுமையாக அறிய சுற்றுலா வழிகாட்டு நியமிப்பது சிறந்த முடிவாகும்
Image Source: pexels-com
ஒரே இடத்தை தேர்வு செய்வது
ஒரே ட்ரிப்பில் பல இடங்களை பார்க்க வேண்டும் என திட்டமிட செய்யாதீர்கள். பெரும்பாலான நேரம் பயணத்திலே முடித்துவிடக்கூடும். நன்றாக ஆராய்ந்து குறிப்பிட்ட பகுதியை சுற்றியுள்ள பகுதியை மட்டுமே பார்க்க திட்டமிட வேண்டும்
Image Source: pexels-com
லக்கேஜ் லிஸ்ட்
நீங்கள் செல்லப்போகும் இடங்களை பொறுத்து, லக்கேஜை ரெடி செய்யுங்கள். வெப்பமான இடங்களுக்கு செல்கையில் குறைவான லக்கேஜ் எடுத்து செல்லுங்கள். அதேநேரம், குளிர் பிரதேசம் என்றால, பனியில் சுற்றுவதற்கு ஏற்ற ஆடைகளை தேர்ந்தெடுங்கள்
Image Source: pexels-com
பொருட்கள் வாங்குவது
வட இந்தியாவின் தனித்துவமான பொருட்களை வாங்க மறக்கக்கூடாது. பாரம்பரிய ஆடைகள், தோல் பொருட்கள் மற்றும் வரலாற்று தளங்களின் மினியேச்சரை வாங்க செய்யலாம். அதேபோல், மலை வாசஸ்தளம் என்றால், கம்பளி, பட்டு ஆகியவற்றால் செய்யப்பட்ட சால்வை, ஸ்வெட்டர் போன்றவற்றை நல்ல தரத்தில் வாங்கலாம்
Image Source: pexels-com
டிக்கெட் - விடுதி முன்பதிவு
வட இந்தியா சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் அலைமோதக்கூடும். நீங்கள் தனியாக சென்றாலும், முன்கூட்டியே ஹோட்டல் மற்றும் பிற விஷயங்களை புக் செய்துவிடுங்கள். இது பயணம் அழுத்தத்தை குறைப்பதோடு பணத்தை மிச்சப்படுத்தக்கூடும்
Image Source: istock
பார்க்க வேண்டிய இடங்கள்
ஆக்ரா, அமிர்தசரஸ், மணாலி, பிரயாக் ராஜ், லடாக், டல்ஹவுசி ஆகியவை வட இந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்
Image Source: istock
பணம் வைத்திருப்பது நல்லது!
வட இந்தியா சுற்றுலாவில் கையில் போதுமான அளவு பணம் வைத்துகொள்வது சிறந்த முடிவாகும். ஏனெனில், சில இடங்களில் நெட்வொர்க் இணைப்பு மிகவும் சிக்கலாக இருக்கக்கூடும். அதேபோல், ஏடிஎம் வசதியும் அதிகமாக இருக்க செய்யாது
Image Source: istock
Thanks For Reading!
Next: இரவில் ஜாலியாக இருக்க உலகின் சிறந்த இடங்கள் எது தெரியுமா?