[ad_1] வண்டலூர் உயிரியல் பூங்கா தொடர்பான சில சுவாரஸ்ய தகவல்கள்!

May 28, 2024

வண்டலூர் உயிரியல் பூங்கா தொடர்பான சில சுவாரஸ்ய தகவல்கள்!

mukesh M

வண்டலூர் உயிரியல் பூங்கா!

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா என்று கூறப்படும் வண்டலூர் உயிரியல் பூங்கா இந்தியாவின் முதல் பொது உயிரியல் பூங்கா ஆகும். சென்னை வாசிகளின் விருப்பமான ஒரு பூங்காவான இந்த வண்டலூர் பூங்கா குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள் இங்கு பார்க்கலாம்.

Image Source: instagram-com

மிகப்பெரிய பூங்கா!

வண்டலூர் உயிரியல் பூங்கா தமிழ்நாட்டின் மிகப்பெரிய பூங்காவாகும். சுமார் 130 ஏக்கர் பரப்பளவில் இந்த பூங்கா அமைந்துள்ளது.

Image Source: unsplash-com

அதிக விலங்குகள் காணப்படுகிறது!

இங்கு 234 இனங்களை சேர்ந்த 2553 விலங்குகள் மற்றும் பல விதமான பறவைகள் உள்ளது. புலிகள் முதல் யானைகள் வரை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பல வனவிலங்குகள் உள்ளது.

Image Source: pexels-com

பழமையான பூங்கா!

சுமார் 160 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையான வறலாற்றை கொண்டது இந்த வண்டலூர் பூங்கா. 1855-ல் திறக்கப்பட்ட இந்த பூங்கா இந்தியாவின் மிகப் பழமையான உயிரியல் பூங்கா என்ற பெருமையை பெற்றுள்ளது.

Image Source: unsplash-com

இனப்பெருக்க திட்டங்கள்!

இனப்பெருக்க திட்டங்களுக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது. நாளடைவில் அழிந்து வரும் வெள்ளை புலி மற்றும் இந்திய யானைகளுக்கு இந்த திட்டம் மிகவும் முக்கியம்.

Image Source: unsplash-com

ஊர்வனை காணப்படும் இடம்!

இந்த பூங்காவில் பல்வேறு வகையான பாம்புகள் ஆமைகள் மற்றும் முதலைகள் உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஊர்வன பூங்கா அமைந்துள்ள இடம் இது.

Image Source: unsplash-com

இயற்கை காட்சிகள்!

இந்த வண்டலூர் உயிரியல் பூங்காவின் பரந்த நிலப்பரப்பில் அழகிய இயற்கை காட்சிகள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது. இது வனவிலங்குகளுக்கு அமைதியான சூழலை வழங்குகிறது.

Image Source: unsplash-com

சஃபாரி அனுபவம்!

வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சுற்றுலா செல்லும் மக்களுக்கு ஒரு தனித்துவமான சஃபாரி அனுபவம் கிடைக்கும். இந்த பூங்காவில் பேருந்து மற்றும் படகு சஃபாரிகளை நீங்கள் அனுபவிக்கலாம்.

Image Source: unsplash-com

கல்வி ஆராய்ச்சி மையம்!

வண்டலூர் உயிரியல் பூங்கா தமிழகத்தில் பிரபலமான சுற்றுலா தளம் மட்டுமல்லாமல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாகவும் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு திட்டங்களை அளிக்கிறது.

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: வனவிலங்கு பூங்காவிற்கு செல்லும் போது செய்யக்கூடாத விஷயங்கள்!

[ad_2]