[ad_1] வனவிலங்கு பூங்காவிற்கு செல்லும் போது செய்யக்கூடாத விஷயங்கள்!

May 28, 2024

வனவிலங்கு பூங்காவிற்கு செல்லும் போது செய்யக்கூடாத விஷயங்கள்!

mukesh M

அடிப்படை விதிகள்!

நம்மில் பலருக்கும் விலங்குகள் மற்றும் பறவைகள் பூங்காவிற்கு சுற்றுலா செல்வது மிகவும் பிடிக்கும். இந்த இயற்கையான சூழலில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில அடிப்படை விதிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

Image Source: unsplash-com

அருகில் செல்ல வேண்டாம்!

நீங்கள் விலங்குகள் அல்லது பறவைகளை அருகில் பார்க்க விரும்பினாலும் பாதுகாப்பு சுவர்களை தாண்டி உள்ளே செல்லக்கூடாது. இது சில நேரங்களில் உங்கள் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடலாம்.

Image Source: pexels-com

உணவளிக்கக்கூடாது!

நீங்கள் வனவிலங்கு பூங்காவிற்கு செல்லும்போது விலங்குகளுக்கு உங்கள் கைகளால் உணவுகளை கொடுக்கக் கூடாது. ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவு வகைகள் விலங்குகளுக்கு ஆபத்தானவை.

Image Source: unsplash-com

கிண்டல் செய்யாதீர்கள்!

ஒரு சிலர் விலங்குகளிடம் குறும்புத்தனம் செய்வார்கள். எனவே தயவு செய்து விலங்குகள் மீது பொருட்களை எறியவோ அல்லது கேலி செய்யவோ வேண்டாம்.

Image Source: unsplash-com

குப்பை போடாதீர்கள்!

வனவிலங்கு பூங்கா மற்றும் பறவைகள் சரணாலயத்திற்குள் குப்பைகளை போடாதீர்கள். குறிப்பாக நீங்கள் சாப்பிடும் சிப்ஸ் பாக்கெட், வாட்டர் பாட்டில் போன்றவற்றை குப்பை தொட்டியில் போடுங்கள்.

Image Source: unsplash-com

கூர்மையான பொருட்கள் கூடாது!

வனவிலங்கு பூங்காவிற்கு செல்லும்போது துப்பாக்கி போன்ற பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. அதேபோல கத்தி போன்ற கூர்மையான பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.

Image Source: unsplash-com

உள்ளே சாப்பிட வேண்டாம்!

வனவிலங்கு பூங்கா மற்றும் பறவைகள் சரணாலயம் ஒரு சுற்றுலா தளம் என்றாலும் கூட நீங்கள் பூங்காவிற்கு உள்ளே உணவுகளை சாப்பிடக்கூடாது.

Image Source: unsplash-com

புகை பிடிக்காதீர்!

நீங்கள் வனவிலங்கு பூங்காவிற்கு அல்லது பறவைகள் சரணாலத்திற்கு சென்றால் அங்கு புகை பிடிக்கவே கூடாது. ஏனென்றால் இந்த புகை விலங்குகள் மற்றும் பறவைகள் உயிருக்கு சேதம் ஏற்படுத்தலாம்.

Image Source: unsplash-com

விதிகளை மீறாதீர்கள்

உங்கள் குழந்தைகளுடன் உயிரியல் பூங்காவிற்கு செல்லும்போது அங்கு கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை விதிகளை மீறுவது உங்கள் உயிருக்கு ஆபத்தானது. எனவே பாதுகாப்பாக இருக்க விதிகளை மீறாதீர்கள்.

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: கர்நாடகாவில் மறைந்திருக்கும் சொர்க்கம்.. கோகர்ணா பற்றி தெரியுமா?

[ad_2]