[ad_1] வயது முதிர்வை ஏற்படுத்தக்கூடிய உணவுகள் பற்றி தெரியுமா?

May 3, 2024

வயது முதிர்வை ஏற்படுத்தக்கூடிய உணவுகள் பற்றி தெரியுமா?

mukesh M

வயது முதிர்வை தூண்டும் உணவுகள்!

வயது முதிர்வு ஏற்பட நாம் உண்ணும் உணவுகள் கூட ஒரு காரணம். ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்கள் உங்களை இளமையாக வைத்திருக்க உதவும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சர்க்கரைக்கு பதிலாக உங்கள் உணவில் தேன் சேர்த்துக் கொள்ளுதல் போன்ற உணவு மாற்றங்கள்.

Image Source: istock

பிரெஞ்ச் ப்ரைஸ்!

பிரெஞ்ச் ப்ரைஸ் தற்போது விரும்பத்தக்க உணவுகளில் ஒன்றாக உள்ளது. எண்ணெயில் பொறிக்கப்படும் உணவுகள் சருமத்திற்கு ஏற்றதல்ல. பிரெஞ்ச் ப்ரைசுக்கு பதிலாக பேக் செய்யப்பட்ட சர்க்கரைவள்ளிக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

Image Source: pexels-com

தேன் அல்லது பழங்கள்!

சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சர்க்கரையும் ஒரு காரணம். அதிகமான சக்கரை உட்கொள்ளல் வயது முதிர்வை துரிதப்படுத்தும் என்கிறார்கள் நிபுணர்கள். சர்க்கரை சேர்த்த இனிப்பு பண்டங்களுக்கு பதிலாக பழங்கள், டார்க் சாக்லேட் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

Image Source: istock

ஆலிவ் எண்ணெய் - அவகேடோ!

வெண்ணெய் சேர்த்த உணவுகளை அதிகம் உட்கொள்ளாதவர்களின் சருமம் மற்றவர்களை விட இளமையாக உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே வெண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் எண்ணெய் அல்லது அவகேடோ பயன்படுத்தலாம்.

Image Source: istock

இறைச்சி உணவுகள்!

பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை. எனவே பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளை தவிர்த்து ஃபிரஷ் ஆன இறைச்சி உணவுகளை சமைத்து உண்ணலாம்.

Image Source: istock

பால் சார்ந்த பொருட்கள்!

பால் சார்ந்த பொருட்களை உட்கொள்வது குறித்து கலவையான விமர்சனங்கள் உள்ளன. வயது முதிர்வை பால் துரிதப்படுத்தலாம் என்பதால் அதற்கு மாற்றாக உங்கள் உணவில் பாதாம், கீரைகள், பீன்ஸ், அத்திப்பழங்கள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.

Image Source: istock

சோடா மற்றும் காபி!

நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் காபி மற்றும் சோடா நமது சரும ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இதில் ஃகாபின் அதிகமாக இருப்பதால் தூக்கம் பாதிக்கப்பட்டு சருமத்திற்கு தேவையான ஓய்வு தடுக்கப்படுகிறது.

Image Source: istock

மது அருந்துதல்!

மது உடலில் உள்ள நீர் சத்தினை எளிதில் உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால் நீச்சத்து குறைபாடு ஏற்பட்டு சருமம் வறண்டு காணப்படுகிறது. அளவுக்கு அதிகமான மதுப்பழக்கம் சருமத்திற்கு கேடு விளைவிக்கும்.

Image Source: istock

இட்லி!

இட்லி நம் வீடுகளில் தவிர்க்க முடியாத ஒரு உணவு. ஆனால் சருமத்திற்கு கேடு விளைவிக்கும் ரத்த சக்கரை அளவை அதிகரித்து சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் இட்லிக்கு பதிலாக மில்லட் சார்ந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.

Image Source: istock

Thanks For Reading!

Next: இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கிறதா? இத படிங்க முதல்ல!

[ad_2]