Jun 3, 2024
நாம் எடுத்துக்கொள்ளும் ஒரு சில உணவுகள் நம் வயிற்று உப்புசத்திற்கு வழிவகுக்க கூடும். வயிற்று உப்புசத்திற்கு வழிவகுக்கும் இந்த ஒரு சில உணவுகளை தவிர்த்து, இதற்கு மாற்றாய் என்ன உண்ணலாம்? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: istock
பீன்ஸில் புரதச்சத்து, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. பீன்ஸில் தேவைக்கு அதிகமான நார்ச்சத்து மற்றும் ஒலிக்கோசாக்ரைய்டுகள் நிறைந்துள்ளதால் சிலருக்கு வயிற்று உப்பசம் உண்டாக்கும். எனவே இதற்கு மாற்றாய் குயினோ உட்கொள்ளலாம்.
Image Source: istock
வயிறு உப்பியது போன்ற உணர்வை ஏற்படுத்தும் உணவுகள் பட்டியலில் பருப்புக்கு முக்கிய இடம் உண்டு. பருப்பு வகைகளிலும் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்து இருப்பதால் ஒவ்வாமை உள்ள ஒரு சிலருக்கு எளிதில் ஜீரணம் ஆவதில்லை. இது வாயு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
Image Source: istock
கார்பனேற்றப்பட்ட சோடா போன்ற பானங்களை அருந்துவதால் வயிறு உப்பியது போன்ற உணர்வு ஏற்படலாம். இதுபோன்ற பானங்களில் உள்ள குமிழ்கள் வீக்கம் மற்றும் வாயு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் இவற்றில் செயற்கை இனிப்புகள் சேர்க்கப்படுவதால் வயிற்றுப்போக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
Image Source: istock
கோதுமை மற்றும் கம்பு போன்றவற்றில் நார்ச்சத்து அதிகமாக இருந்தாலும் கரையாத நார்ச்சத்தின் அளவுகள் அதிகம். இது செரிமான செயல்பாட்டில் பாதித்து உப்புசத்திற்கு வழிவகுக்கிறது. இந்த உப்புசத்தை தவிர்க்க கோதுமைக்கு பதில் ஓட்ஸ் பயன்படுத்தலாம்!
Image Source: istock
வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த முட்டைக்கோஸ் மற்றும் காலிஃப்ளவரில் உள்ள சர்க்கரைகள் செரிமானமாக தாமதமாகிறது. இந்த காய்கறிகளை நன்கு சமைத்து உண்பதன் மூலம் வாயு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
Image Source: istock
பச்சை வெங்காயத்தில் உள்ள பிரக்டான் எனப்படும் நார்ச்சத்து செரிமான மண்டலத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். நன்கு சமைத்த வெங்காயத்தை விட பச்சை வெங்காயம் உடலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
Image Source: istock
வெங்காயம் போன்றே பூண்டிலும் உள்ள பிரக்டான் எனப்படும் நார்ச்சத்து கரைவதற்கு தாமதமாவதால் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். பூண்டை பச்சையாக உண்பதை விட சமைத்து உண்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
Image Source: istock
ஆரோக்கியமான பழம் ஆப்பிள் என கூறப்பட்டாலும் ஒரு சிலரில் இதில் உள்ள சர்க்கரைகள் மற்றும் பிரக்டோஸ் செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. அளவுக்கு அதிகமாக உட்கொள்ளப்படும் ஆப்பிள்களால் மலச்சிக்கல் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
Image Source: pexels-com
Thanks For Reading!