May 16, 2024
வயிற்று புற்றுநோய் எனப்படுவது வயிற்றின் புறணியில் இருந்து உருவாகும் புற்றுநோயாகும். இரைப்பை புற்றுநோய் எனவும் அறியப்படும் இந்த புற்றுநோயின் காரணங்கள் என்ன? அறிகுறிகள் என்ன? என்பது பற்றி இங்கு காணலாம்!
Image Source: istock
இந்த வயிற்று புற்றுநோய் ஏற்பட்டால் நம் வயிற்றின் உட்புறப் பகுதியில் இருந்து ஆரம்பித்து வெளிப்புற சுவர்களுக்கு புற்றுநோய் பரவி விடும். இந்த நோய் படிப்படியாக உடலில் பரவி உடல் உறுப்புகளை சேதம் அடைய செய்கிறது.
Image Source: istock
இந்த வயிற்று புற்றுநோயின் அறிகுறிகள் பொதுவாக இரண்டு விதமாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிலை அறிகுறிகள் மற்றும் முற்றிய நிலை அறிகுறிகள் என இதில் இரண்டு வகை உள்ளது.
Image Source: istock
ஆரம்ப நிலையில் ஒரு சில நபர்களுக்கு எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. ஆனால் ஒரு சில நபர்களுக்கு வயிற்று புற்று நோய் ஏற்பட்டால் வயிற்றில் புற்றுநோய் கட்டி வளரத் தொடங்கும்.
Image Source: istock
வயிற்று புற்றுநோய் ஏற்பட்டால் ஆரம்ப நிலையில் பசியின்மை ஒரு முக்கிய அறிகுறியாகும். இவர்களுக்கு அடிக்கடி பசி உணர்வு ஏற்படாது.
Image Source: istock
வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பசியின்மை காரணத்தினால் கொஞ்சமாக உணவு சாப்பிட்டால் கூட அதிகமாக சாப்பிட்ட உணர்வை ஏற்படுத்தும். இதனால் நாளடைவில் உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.
Image Source: istock
வயிற்று புற்றுநோய் ஏற்பட்டால் குமட்டல் வாந்தி மலம் கழிக்கும் போது ரத்தம் வெளியேறுவது போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம், இது போன்ற அறிகுறிகளை கண்டறிந்தால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
Image Source: istock
வயிற்று புற்று நோய் ஏற்படுவதால் தேவையான அளவு உணவு சாப்பிட முடியாது. இந்த நிலையில் வயிற்றில் நீர் சேர்ந்து வயிறு உப்புதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
Image Source: istock
Thanks For Reading!