Jul 31, 2024
2025-ஆம் ஆண்டு நடக்கவுள்ள IPL தொடருக்கான ஏலத்தில் ஒவ்வொரு அணியும் - தங்கள் அணி வீரர்களில் 3 - 4 வீரர்களை தக்க வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் CSK-வில் இந்த வாய்ப்பை பெற இருக்கும் வீரர்கள் பற்றி இங்கு நாம் காணலாம்!
Image Source: x-com/csk
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் - 5 முறை கோப்பை IPL கோப்பை வென்ற நாயகன் MS தோனி. எதிர்வரும் IPL 2025 தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்தால், CSK தக்க வைக்கும் முதல் வீரராக இவர் இருப்பார்!
Image Source: x-com/csk
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டன். தோனிக்கு அடுத்தப்படியாக CSK அணியை வழிநடத்தி வரும் இவர், CSK-வின் Retained Players பட்டியலில் கட்டாயம் இடம் பிடிப்பார்.
Image Source: x-com/csk
IPL 2022 தொடருக்கான ஏலத்தில் சிவம் துபேவை CSK அணி சுமார் 4 கோடிக்கு வாங்கியது. CSK அணியின் பல்வேறு வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர், CSK-வின் Retained Players பட்டியலில் இடம்பிடிக்கும் வாய்ப்பு அதிகம்!
Image Source: x-com/csk
CSK-வின் மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜா IPL 2022 தொடரில் கேப்டனாகவும் செயல்பட்டவர். IPL-ல் இருந்து தோனி விலகினால், இளம் தலைமுறையை வழிநடத்தும் பொறுப்பு இவரையே வந்து சேரும்!
Image Source: x-com/csk
IPL 2024 தொடருக்கான ஏலத்தில் சுமார் 1.8 கோடிக்கு வாங்கப்பட்ட நியூசிலாந்து அணி வீரர். சிறந்த ஆல்-ரவுண்டரான ரச்சின் ரவீந்திராவை CSK அணி எதிர்வரும் ஏலத்தில் தக்கவைத்துக்கொள்வதன் வாய்ப்பு அதிகம்!
Image Source: x-com/csk
குட்டி மலீங்கா என அழைக்கப்படும் மதீஷ பத்திரன, 2022-ஆம் ஆண்டு தொடங்கி CSK அணியில் விளையாடி வருகிறார். CSK அணியின் முதன்மை பந்துவீச்சாளரான இவரை, CSK தக்க வைப்பதன் வாய்புகள் அதிகம்!
Image Source: x-com/csk
மதீஷ பத்திரன போன்றே CSK-வின் கவனத்தை ஈர்த்த ஒரு இலங்கை பந்துவீச்சாளர் மஹீஸ் தீக்ஷனா. 2022-ஆம் ஆண்டு சுமார் 70 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட இவர், CSK-வின் Retained Players பட்டியலில் இடம்பிடிக்கும் வாய்ப்பு உள்ளது!
Image Source: x-com/csk
IPL 2025 தொடரில் இருந்து MS தோனி விலகினால், CSK அணியின் விக்கெட் கீப்பராக ஆரவெல்லி அவனிஷ் ராவ் இருக்கும் வாய்ப்பு அதிகம். இந்திய U-19 அணியில் விளையாடிய இவர், CSK அணியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயணித்து வருகிறார்!
Image Source: x-com/csk
Thanks For Reading!