Aug 22, 2024
BY: Anoj, Samayam Tamilஇட்லி, தோசைக்கு வெங்காய சட்னி சூப்பர் காம்பினேஷன் ஆகும். வெங்காயத்தை வறுத்து அரைத்தால் அதன் சுவை அட்டகாசமாக இருக்கும். அதன் எளிய செய்முறையை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
உளுந்து - 3 டீஸ்பூன்; வர மிளகாய் - 2; பெரிய வெங்காயம் - 2; கறிவேப்பிலை - சிறிதளவு; தேங்காய் - 1 கப்; புளி தண்ணீர் - 2 டீஸ்பூன்; கடுகு - 1 டீஸ்பூன்; கடலை பருப்பு - அரை டீஸ்பூன்
Image Source: istock
முதலில் கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் 2 டீஸ்பூன் உளுந்தை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்
Image Source: pexels-com
பிறகு, வர மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுத்துவிட்டு, தேவையான அளவு உப்பு போட்டு மிக்ஸ் செய்யவும்
Image Source: istock
பிறகு, கொஞ்சமாக கறிவேப்பிலை மற்றும் 1 கப் தேங்காய் துண்டுகள் அல்லது தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்
Image Source: istock
அடுத்து, புளித் தண்ணீரை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துவிட்டு, அடுப்பை அணைத்து விட வேண்டும்
Image Source: istock
கலவை நன்றாக ஆறியப்பிறகு, மிக்ஸி ஜாருக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்
Image Source: istock
அதே கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கடலை பருப்பு, உளுந்து மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்
Image Source: istock
இந்த தாளிப்பை மிக்ஸியில் அரைத்த கலவையில் சேர்த்து ஒரு முறை கிளறினால், சூப்பரான சுவையில் வறுத்த அரைத்த வெங்காய சட்னி ரெடி. இதனை வீட்டிலிருப்போருக்கு கூடுதலாக தோசை, இட்லி கேட்டு சாப்பிடுவார்கள்
Image Source: istock
Thanks For Reading!