Jul 24, 2024
BY: mukesh M, Samayam Tamilவாழைப்பழத்தை எண்ணெயில் வறுத்து வெல்லம், மாவுடன் சேர்த்து வித்தியாசமான முறையில் இனிப்பு போண்டா ஒன்றினை தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!
Image Source: istock
வாழைப்பழம் - 6 | வெல்லம் - 200கி | மைதா - 1½ கப் | கோதுமை மாவு - 1½ கப் | ஏலக்காய் பொடி - 1 ஸ்பூன் | உப்பு - 1 ஸ்பூன் | பேக்கிங் சோடா - 1 சிட்டிகை | எண்ணெய் - தேவையான அளவு
Image Source: istock
முதலில் வாழைப்பழம் பொரித்து எடுக்க கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் போதுமான அளவு எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்!
Image Source: istock
எண்ணெய் நன்கு கொதிக்கும் நிலையில், எடுத்துக்கொண்ட வாழைப்பழத்தை சேர்து பொரித்து எடுத்து ஆறவிடவும். பின் தோலை நீக்கி பழத்தை மட்டும் தனி ஒரு பாத்திரத்தில் சேர்த்து மசித்துக்கொள்ளவும்!
Image Source: istock
இதனிடையே எடுத்துக்கொண்ட மைதா, கோதுமை மாவினை ஒரு சல்லடை உதவியுடன் சலித்து தூசி நீக்கி சுத்தம் செய்து வாழைப்பழம் உள்ள பாத்திரத்திற்கு மாற்றவும்.
Image Source: pexels-com
தொடரந்து எடுத்துக்கொண்ட வெல்லத்தை இடித்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து, மாவு உள்ள பாத்திரத்திற்கு மாற்றவும்!
Image Source: istock
பின் இதனுடன் உப்பு, பேக்கிங் சோடா, ஏலக்காய் பொடி ஆகியவற்றையும் சேர்த்து பிசையவும். அதாவது, போதுமான அளவு தண்ணீர் சேர்த்து அரை கூழ்ம நிலைக்கு கரைத்துக்கொள்ளவும்!
Image Source: istock
தற்போது போண்டா பொரித்து எடுக்க கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் முன்பு வாழைப்பழம் பொரித்து எடுத்த எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்!
Image Source: istock
எண்ணெய் நன்கு கொதிக்கும் நிலையில், தயாராக கரைத்து வைத்த போண்டா மாவினை சிறு சிறு அளவு உருண்டைகளாக சேர்த்து பதமாக பொரித்து எடுக்க சுவையான பொரித்த வாழைப்பழ போண்டா ரெடி!
Image Source: istock
Thanks For Reading!