Jun 27, 2024
BY: Anojவெண்டைக்காய் ஆரோக்கியமான காய்கறியாக இருந்தாலும், அதனை வெட்டும் போது பிசுபிசுப்பாக ஒட்டக்கூடும். அதேபோல், சமைக்கும் போது கொழகொழவென்று இருக்கும். இந்தப் பதிவில், வெண்டைக்காயை பிசுபிசுவென இல்லாமல் சமைக்கும் வழிகளை பற்றி காணலாம்
Image Source: istock
கடைகளில் நல்ல வெண்டைக்காய் பார்த்து வாங்குவது மிகவும் முக்கியம். அவை மென்மையானதாக இருப்பதோடு அதிகமாக விதை இல்லாத வகையில் பார்த்து வாங்க வேண்டும்.
Image Source: pexels-com
வெண்டைக்காயின் பிசுபிசுப்பு தன்மையை, ஈரப்பதம் அதிகரிக்கக்கூடும். எனவே, சமைக்கும் முன்பு வெண்டைக்காயை கழுவியதும் சுத்தமான துண்டில் நன்றாக துடைத்து உலர வைக்கவும்
Image Source: istock
அடுப்பில் வெண்டைக்காயை சேர்த்து வதக்கும் போது, கொஞ்சமாக தயிர் சேர்ப்பது சிறந்த முடிவாகும். இது கொழகொழுப்பு உருவாகுவதை தடுப்பது மட்டுமின்றி உணவின் சுவையை அதிகரிக்க செய்கிறது
Image Source: pexels-com
வெண்டைக்காய் சமைக்கும் போது, கடலை மாவை லேசாக சேர்ப்பது, பிசுபிசுப்பு தன்மையை குறைக்கக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்
Image Source: istock
ஒரு பெரிய பவுலில், கால் கப் வினிகர் மற்றும் 1 கப் தண்ணீரை ஒன்றாக சேர்க்க வேண்டும். அதில் சமைக்காத வெண்டைக்காயை சில நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு, வெண்டைக்காயை உலரவைத்து சமையலில் பயன்படுத்தினால் பிசுபிசுப்பு குறைவாக இருக்கும்
Image Source: istock
வெண்டைக்காய் சமைக்கும் போது கடாயை ஒருபோதும் மூடிவைக்கக்கூடாது. ஏனெனில், ஈரப்பதம் வெண்டைக்காயின் பிசுபிசுப்பு தன்மையை இரண்டு மடங்காக அதிகரிக்கக்கூடும். திறந்த பாத்திரத்திலே வெண்டைக்காயை சமைக்க வேண்டும்
Image Source: istock
வெண்டைக்காய் சமைக்கும் போது எலுமிச்சை சாற்றை பிழிந்துவிடுவது, பிசுபிசுவென ஒட்டும் தன்மையை குறைக்க செய்யலாம்
Image Source: istock
வெண்டைக்காயின் ஈரப்பதத்தை உப்பு அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, அவற்றை கடைசியாக சேர்ப்பது சிறந்த முடிவாகும். இந்த டிப்ஸை சரியாக பின்பற்றி சூப்பரான வெண்டைக்காய் உணவுகளை ரெடி செய்யுங்கள்
Image Source: istock
Thanks For Reading!