May 30, 2024
உடலுக்கு உடற்பயிற்சி எப்படியோ, மனதிற்கும் அறிவுக்குமான பயிற்சியாக வாசிப்பு பழக்கம் உள்ளது. ஆனால், பணி சூழல் பலருக்கும் வாசிப்பு என்பதையே கைவிடும் நிலைக்கு தள்ளி விட்டது. ஆனால் வாசிக்க நினைப்பவர்கள் மீண்டும் எப்படி அந்த பழக்கத்தை உருவாக்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: pexels-com
முதலில் பிடித்த எழுத்தாளர்கள், புத்தக வகைகள், புனைவு அல்லது உண்மை கதைகள், அப்போதைய ட்ரெண்டிங் தலைப்புகள் உள்ளிட்டவற்றை தேர்வு செய்யவும். இது உங்களுக்குள் ஒரு வாசிக்கும் ஆர்வத்தை உண்டாக்கும்.
Image Source: pexels-com
எடுத்தவுடன் அதிக பக்கங்கள் கொண்ட நாவல்கள், புத்தகங்கள் படிப்பதை கைவிடுங்கள். சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றை படிப்பதால் வாசிக்கும் ஆர்வம் மீண்டும் மெல்ல மெல்ல அதிகரிக்கும். உங்கள் மனது உற்சாகமாக செயல்படும்.
Image Source: pexels-com
தற்போது புத்தகங்கள் எல்லாம் டிஜிட்டல் வடிவில் வந்து விட்டது. எனவே உங்கள் தினசரி பயணம் தொடங்கி வேலை எதுவும் இல்லாமல் இருக்கும் சமயங்களில் போனில் படிக்கலாம். படிக்க நேரம் இல்லாதவர்கள் ஆடியோவாக கேட்கலாம்.
Image Source: pexels-com
வாட்ஸ்அப் தொடங்கி நீங்கள் இருக்கும் பகுதியில் கூட புத்தக வாசிப்பு குழு செயல்படும். அதனை கண்டறிந்து அவர்களுடன் பயணிக்க முயற்சியுங்கள். மற்றவர்களுடன் கூடி புத்தகங்கள் பற்றி விவாதிப்பது ஆரோக்கியமான ஒன்றாக இருக்கும்.
Image Source: pexels-com
தினமும் இரவு தூங்க செல்லும் முன் பலருக்கும் பாட்டு கேட்பது, உரையாடுவது போன்ற பழக்கங்கள் இருக்கும். அப்படி இருப்பவர்கள் அதனை மாற்றி தூங்க செல்வதற்கு 15 நிமிடங்கள் புத்தகங்கள் படிக்கலாம்.
Image Source: pexels-com
நூலகம் அல்லது புத்தக கடைகளில் வாங்கும் புத்தகங்களை குறிப்பிட்ட காலத்துக்குள் படிக்க முடிக்க சரியான முறையில் திட்டமிடுங்கள். அதுமட்டுமல்லாமல் பல இடங்களில் நடக்கும் புத்தக கூட்டங்களில் கலந்து கொள்ள முயற்சியுங்கள்.
Image Source: pexels-com
உங்களுக்கு புத்தகத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டால் அதனால் மன அழுத்தத்துக்கு உள்ளாகாதீர்கள். புத்தகம் வாசிப்பது மன அழுத்தத்தை குறைக்கும் என்பதால் அதனை தொடருங்கள்.
Image Source: pexels-com
வாங்கினோம், படித்தோம் என்றில்லாமல் புத்தகங்களின் கருத்துகளை நன்கு ஆராய வேண்டும். அதனை குறிப்பெடுக்க ஏராளமான செயலிகள் வந்து விட்டது. இது உங்களின் வாசிப்பு பழக்கத்துக்கு மிகப்பெரிய உந்துதலாக அமையும்.
Image Source: pexels-com
Thanks For Reading!