Jul 16, 2024
பண்டைய காலம் முதலே வானியல் சாஸ்திரத்தில் உலகிற்கே முன்னோடியாக இந்தியா இருக்கிறது. இங்கு சில சுவாரசியமான இந்தியாவின் வானவியல் பங்களிப்புகளைப் பார்ப்போம்.
Image Source: unsplash-com
இந்திய வானியல் எப்போதுமே ஜோதிடத்துடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டது. ஜோதிட சாஸ்திரம் காலண்டர் கணக்கீடுகள், கிரகண கணிப்புகள் போன்றவற்றை துல்லியமாக வழங்குகிறது.
Image Source: unsplash-com
கணிதவியல் மற்றும் வானவியலாளரும் ஆன ஆரியபட்டா சூரியக் குடும்பம், பூமியின் சுழற்சி மற்றும் கிரகணங்களின் காரணங்கள் பற்றிய கோட்பாடுகளைத் தனது ‘ஆரியபாட்டியா’ நூலில் பதிவு செய்துள்ளார்.
Image Source: unsplash-com
கிபி 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருத நூலான சூரிய சித்தாந்தம் பூமியின் சுழற்சி, கிரகணங்கள் ஏற்படும் கால நேரம் போன்ற கணக்கீடுகளைக் கொண்டுள்ளது.
Image Source: unsplash-com
ராஜா ஜெய் சிங்கால் 18ம் நூற்றாண்டில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கட்டப்பட்ட ஜந்தர் மந்தர் ஆய்வுக்கூடங்கள் வானியல் இயக்கங்களை துல்லியமாகக் கணக்கிடப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டவை ஆகும்.
Image Source: unsplash-com
நவீன கணக்கீடுகளைக் கொண்டு சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் கணிக்கப் படுகின்றன. இந்திய வானவியல் அறிஞர்கள் பண்டைக் காலம் முதலே கிரகணங்களை துல்லியமாகக் கணிக்கும் திறன் கொண்டிருந்தனர்.
Image Source: unsplash-com
வானவியல் அடிப்படையில் கட்டிடங்களை அமைப்பது தொடர்பான வாஸ்து சாஸ்திரம் எனப்படும் கலை இந்தியர்களால் உலகிற்கு வழங்கப்பட்ட மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.
Image Source: unsplash-com
இந்திய வானியலாளர் பாஸ்கரா கோள்கள் நகரும் போது வேகத்தில் ஏற்படும் மாறுபாடுகளைக் கணக்கிடும் மாதிரியையும், எபிசைக்கிள்கள் மூலம் கோள்களின் நிலையைக் கணக்கிடும் முறையையும் உருவாக்கினார்.
Image Source: pexels-com
பூஜ்ஜியம், தசம அமைப்பு, இயற்கணிதம் போன்ற இந்தியக் கணித மேதைகளால் கண்டுபிடிக்கப்பட்ட கணித நுட்பங்களே வானியல் நிகழ்வுகளைத் துல்லியமாகக் கணக்கிட இன்றளவும் உதவுகிறது.
Image Source: unsplash-com
Thanks For Reading!