Jun 27, 2024
உணவு ஜீரணமாகுவதில் ஏற்படும் சிக்கல்களால் பலருக்கும் வாயு பிரச்சனை ஏற்படுகிறது. இது வயிற்று பிடிப்பு, வயிறு உப்புசம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும். இதிலிருந்து விடுபட காலையில் சாப்பிடக்கூடாத உணவுகள் பற்றி காணலாம்
Image Source: istock
உங்க காலை பொழுதை டீ, காபியுடன் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இது வயிற்றில் அமில அளவை அதிகரித்து, வாயு உருவாக்கத்திற்கு வழிவகுக்கிறது. குறிப்பாக, லாக்டோஸ் சகிப்புத்தன்மை இருப்பவர்கள் செரிமான கோளாறுகளை சந்திக்க நேரிடும்
Image Source: pexels-com
காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் போன்ற பச்சை இலை காய்கறிகளில் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. அவை ஜீரணமாகிட நேரம் எடுக்கும் என்பதால், வாயு உற்பத்திக்கு வழிவகுக்கும்
Image Source: istock
காலை உணவாக ஆப்பிள் மற்றும் பேரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்கவும். அதிலுள்ள நார்ச்சத்து மற்றும் பிரக்டோஸ் உள்ளடக்கம், வயிறு உப்புசம் மற்றும் வாயுவை உண்டாக்கக்கூடும்
Image Source: istock
வெள்ளரிக்காய் - வெங்காயம் சேர்த்த சாலட் போன்ற உணவுகளை காலை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், ஜீரணமாகிட நேரம் எடுப்பதோடு வாயு அதிகரிக்க செய்திடும்
Image Source: istock
சோளத்தில் cellulose என்னும் ஒரு வகை நார்ச்சத்து உள்ளது. இது சிலருக்கு செரிமானத்திற்கு சவாலாக இருக்கக்கூடும்
Image Source: istock
ஆரஞ்சு, தக்காளி போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது சருமம் மற்றும் எதிர்ப்பு சக்திக்கு உதவும் என்றாலும், வெறும் வயிற்றில் சாப்பிடுவது நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்று கோளாறுகளை உண்டாக்கக்கூடும்
Image Source: istock
ஓட்மீல் ஆரோக்கியமான காலை உணவாக இருந்தாலும், அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது வாயு போன்ற வயிற்று பிரச்சனைகளை உண்டாக்க வாய்ப்புள்ளது.
Image Source: istock
காபி, டீக்கு பதிலாக மூலிகை டீ குடிக்கலாம். பழங்களை பொறுத்தவரை பெர்ரியில் ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் சாப்பிட செய்யலாம். காய்கறிகளை எப்போதும் வேகவைத்து சாப்பிடுவது வாயு தொல்லையை குறைக்க உதவும்
Image Source: istock
Thanks For Reading!